Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடெல்லி அணிக்கு உதவுவாரா மிட்செல் மார்ஷ்? குறைகளை நிவர்த்தி செய்யுமா பெங்களூர் அணி?

    டெல்லி அணிக்கு உதவுவாரா மிட்செல் மார்ஷ்? குறைகளை நிவர்த்தி செய்யுமா பெங்களூர் அணி?

    இன்று இரவு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன.

    கடந்தப்போட்டியில் சென்னை அணியிடம் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆய்ந்து, அதை நிவர்த்தி செய்தே இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களம் காணும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறுதி ஓவர்களில் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதை இன்று நிறுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.

    அதேப்போல், இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள டெல்லி அணியானது, இன்றையப் போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. எதிர்ப்பார்த்த வீரர்கள் பெரிதும் சோபிக்காமல் இருப்பது, டெல்லி அணிக்கு பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. 

    ரிஷப் பண்ட் அணியை முன்னுக்கு கொண்டுவர அனைத்து வகையிலும் தன் முயற்சியை மேற்கொள்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது ஆனால் எடுக்கப்படும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதுதான் வருந்தக்கூடிய செய்தி. இன்று அந்த வருத்தம் நீங்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

    மிட்செல் மார்ஷ் இன்று டெல்லி அணிக்கு திரும்புகிறார். இது அந்த அணிக்கு புது உத்வேகத்தையும், ஆறுதலையும் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், டெல்லி அணி 10 முறையும், பெங்களூர் அணி 16 முறையும் வெற்றியை ருசித்துள்ளன. 

    இன்றைய போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கவிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தை பொறுத்தவரையில் பந்துவீச்சைத் தேர்வு செய்யும் அணியே அதிக முறை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    வெற்றிப்பாதைக்கு திரும்புவது  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியா, டெல்லி கேபிடல்ஸ் அணியா என்பது இன்று இரவு தெரிந்துவிடும். 

    இதையும் படிங்க; பவுலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் நாங்க கெத்துதான் – நிரூபித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....