Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" - இன்றைய ஐபிஎல் சவால்!

    “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – இன்றைய ஐபிஎல் சவால்!

    இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், கடந்த போட்டியில் செயல்பட்ட விதம் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாகவே இருந்தது. 

    நாங்கள் வீழ்ந்து மட்டுமே இருக்க மாட்டோம் என அவ்வப்போது தனது எதிரணிகளுக்கு நிரூபிக்கிறது, டெல்லி அணி! வார்னர், பிரித்வி ஷா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி கடந்தப் போட்டியில் மிரட்டியது என்றே கூறலாம். 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தமட்டில், ஆறு ஆட்டங்களில் விளையாடி நான்கு வெற்றிகளை ருசித்திருக்கிறது. ஜாஸ் பட்லர் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோரின் பேட்டிங்கும், சஹால் மற்றும் அஷ்வினின் பந்துவீச்சும் டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

    இரு அணிகளிலுமே மிடில் ஆர்டர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. ஆதலால், இன்றையப் போட்டியில் மிடில் ஆர்டர் எந்த அணியின் பக்கம் வலுவாக இருக்கிறதோ அந்த அணி இன்று வெற்றி வாகை சூட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. 

    பந்துவீச்சில் இரு அணிகளும் ஏறத்தாழ ஒன்று என்றாலும், ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் சற்று கூடுதல் பலத்தை பெற்றுள்ளது. இதுவரை நேருக்கு நேர் மோதியதில், இரு அணிகளும் தலா 12 முறை வெற்றிகளை பெற்றுள்ளன. 

    ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதும் போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. 

    மேலும், வான்கடே மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே பெறுவாரியான வெற்றிகளை ருசிக்கின்றன. ஆதலால், இன்றையப் போட்டியில் யார் டாஸ் வென்றாலும், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுப்பர் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    விளையாடுவர் என்று எதிர்ப்பாரக்கப்படும் வீரர்கள்;

    டெல்லி அணி –பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மயர், ரியான் பராக், கருண் நாயர், அஷ்வின், ஓபேட் மெக்காய், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல். 

    இதையும் படியுங்கள், தான் யாரென்று மீண்டும் நிரூபித்த எம்.எஸ்.தோனி; தொடர் தோல்வியில் ரோகித் சர்மா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....