Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடெல்லி எய்ம்ஸில் போராட்டம் தொடுத்த செவிலியர்கள்; தவிக்கும் நோயாளிகள்...

    டெல்லி எய்ம்ஸில் போராட்டம் தொடுத்த செவிலியர்கள்; தவிக்கும் நோயாளிகள்…

    கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களின் துறைசார்ந்த குறைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிச்சுமை மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், அவர்கள் சந்தித்து வரும் மற்ற குறைகளை முன்னிறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் முறையிட்ட செவிலியர் சங்கத்தின் தலைவர் ஹரிஷ்குமார் ஹஜ்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்து பேசிய மருத்துவர்கள் தரப்பு, செவிலியர்களின் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹரிஷ்குமார் ஹஜ்லா மீதும் குற்றங்களை அடுக்கியது. அவர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், 3 நாட்களுக்கு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதால் 80க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காத்திருக்க வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

    பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் சங்கத் தலைவர் ஹரிஷ்குமார் ஹஜ்லாவின் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரியும், அந்த நடவடிக்கையை கண்டித்தும் செவிலியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். 

    சுமார் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணியாளர் நியமனம் ஆகியவற்றை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் செவிலியர்கள் இன்றி நோயாளிகள் தவித்தும் வருகின்றனர். பணி நியமன ஆணையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் செவிலியர்கள் உழைப்பு மற்றும் தியாகம், மனித சமுதாயத்தால் துளி அளவும் மறக்க முடியாதது. இந்நிலையில் அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் அலைக்கழித்து வருவது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அதே நேரத்தில் செவிலியர்களின் போராட்டம் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்குவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க; முயன்ற ராயுடு, கை விட்ட தோனி; அதிரடி காட்டிய தவான் – ஐபிஎல் பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....