Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யா மீது போர்தொடுக்கும் ஹேக்கர்கள் : என்ன சொல்கிறது சீனா ?

    ரஷ்யா மீது போர்தொடுக்கும் ஹேக்கர்கள் : என்ன சொல்கிறது சீனா ?

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இப்போரானது உக்ரைன் சிறிதும் பின்வாங்காததால் 25 நாட்களைத் தாண்டி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா,பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும், ரஷ்ய கால்பந்து அணிக்கும் உலகளாவிய போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. சர்வேதேச நீதிமன்றம் போரை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு ஆணையிட்டபோதிலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனில் போர்தொடுத்து வருகிறது. உக்ரைனில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் அதன் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

    இந்நிலையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கால்பந்து மைதானத்தில், பொதுமக்கள் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எழுச்சியுரை ஆற்றினார். அதனை நேரடி ஒளிபரப்பு செய்த ரஷ்ய தேசிய தொலைக்காட்சியில் சுமார் 10 நிமிடங்கள் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டது. புதின் பேசிக்கொண்டிருக்கும் போதே நடந்த இந்த சம்பவத்துக்கு பதில் கூறிய, ரஷிய தேசிய நேரலை ஒளிபரப்பு நிறுவனம், நேரலை தொலைக்காட்சி கருவியில் ஏற்பட்ட திடீர் கோளாறினால்தான் இந்த இடையூறு ஏற்பட்டது என விளக்கம் அளித்திருந்தது. 

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சமூகவலைதளங்களில் அனானிமௌஸ் ஹேக்கர்கள் என்ற பெயரில் ஒரு சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு அது பலராலும் பகிரப்பட்டு வந்தது. ரஷ்யா செய்யும் போர்க்கொடுமைகள் பற்றிய அந்த வீடியோவில் உக்ரைனில் ரஷ்யா தாக்கிய பகுதிகளின் படங்கள் மற்றும் போர்க்கொடுமைகள் பற்றி போர்வீரர்கள் பேசும் ஒரு சில வீடியோ க்ளிப்புகள் ஆகியவை இருந்தன. மேலும், அதில் அவர்கள் உக்ரைனில் நடக்கும் கொடுமைகளை ஒளிபரப்பவே ரஷ்ய தொலைக்காட்சியை ஹேக் செய்ததாகப் பதிவிட்டிருந்தனர். கிட்டத்தட்ட சைபர் வார் போல இருந்த இந்த தாக்குதலால் 12 நிமிடங்கள் ரஷ்ய தொலைக்காட்சியை ஹேக் செய்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், உக்ரைனில் அமைதி திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் விரைவில் கிரெம்ளின் நகரத்தைத் தாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர். தாங்கள் ரஷ்ய அரசின் முக்கிய கோப்புக்களையும் திருடி வைத்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசியுள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெட்கோட்டைச் சேர்ந்த லிசா போர்டே, இந்த தாக்குதல் எல்லாம் ஆரம்பகட்டத்தைச்  சேர்ந்தவை என்றும், ஆனால் தொலைக்காட்சிகளைக் ஹேக் செய்வது கடினம் என்றும், இவர்கள் செய்தது ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். 

    இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் போர் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆயுத உதவி செய்தால் எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய அமெரிக்காவுக்குகான சீனதூதர் குயின் கேங் சீனா, ரஷ்யாவுக்கு எந்த ஆயுத உதவியும் வழங்காது என தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் சுமூகமான முடிவைக் கொண்டுவர உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....