Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் திருவிழாவின் முதல் நாள் இன்று; சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதல்!

  ஐபிஎல் திருவிழாவின் முதல் நாள் இன்று; சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதல்!

  பெரும் ஆவலுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நாள் வந்தாயிற்று. ஆம்! மார்ச் 26 ஆம் தேதியான இன்றில் இருந்து மே மாதம் 29 ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தினம் தினம் திருவிழாதான். 

  ஐபிஎல் திருவிழா 

  இந்தியன் பீரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. தினந்தோறும் போட்டிகள், தினந்தோறும் வெற்றி தோல்வி கணிப்புகள், நிகழ்வுகள் என அனைத்தும் உற்சாகமூட்டுபவையாக இருக்கப் போகின்றன. 

  எட்டு அணிகள் மட்டுமே ஐபிஎல் கோப்பைக்காக போட்டிப்போட்டு வந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் பதினைந்து அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட இருக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் இம்முறை களமிறங்க இருக்கின்றன. 

  15 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது இன்று மும்பையில் உள்ள பிரபல வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட இருக்கிறது. இப்போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கும். 

  முந்தைய போட்டிகள் 

  ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் இதுவரை நேருக்கு நேர் இருபத்தைந்து போட்டிகளில் மோதியிருக்கின்றன. அவற்றில் சென்னை அணி 17 முறையும் கொல்கத்தா அணி 8 முறையும் வெற்றிப்பெற்று இருக்கின்றன.

  அதேப்போல், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கொல்கத்தாவின் ஆதிக்கத்தை விட சென்னை அணியின் ஆதிக்கம் அதிகமாகவே இதுவரை காணப்பட்டு வந்திருக்கிறது.

  கொல்கத்தா அணியானது இதுவரை வான்கடே மைதானத்தில் விளையாடிய பதினொரு போட்டிகளில், பத்து போட்டிகளில் தோல்வியுற்று இருக்கிறது. 

  அணிகள் விவரம் 

  சென்னை அணியை பொறுத்தவரையில் தோனி கேப்டனாக இல்லாமல் வீரராக இம்முறை களம் காண இருக்கிறார். சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடஜா இன்றையப் போட்டியில் இருந்து செயல்பட இருக்கிறார். மேலும் முக்கிய வீரராக கருதப்படும் மொயின் அலி இன்றையப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  கொல்கத்தா அணியை பொறுத்தவரையில், ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக கொண்டு, இந்த ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது. கொல்கத்தா அணியின் வீரர் சவுதி இப்போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் : ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மகேஷ் தீக்ஷனா, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர். துஷார் தேஷ்பாண்டே, ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சௌத்ரி, கே.எம். ஆசிப், சிமர்ஜீத் சிங், பகத் வர்மா

  கொல்கத்தா அணி வீரர்கள் ; வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், சமிகா கருணாரத்னே, சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ், ரசிக் சலாம், முகமது நபி, ஷெல்டன் ஜாக்சன், ரிங்கு சிங், அனுகுல் ராய், பிரதம் சிங், அபிஜீத் தோமர், அமன் ஹக்கிம் கான், டிம் சவுத்தி, அசோக் ஷர்மா, ரமேஷ் குமார்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....