Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குகிசு கிசுநம்பர் நடிகையின் ஆசையை தூண்டும் காப்பி இயக்குனர் - கலக்கத்தில் காதலர்!

    நம்பர் நடிகையின் ஆசையை தூண்டும் காப்பி இயக்குனர் – கலக்கத்தில் காதலர்!

    காப்பி இயக்குனர் தனது முதலாவது படத்திலேயே  நம்பர் நடிகையை நடிக்க வைத்து படமும்  வெற்றி அடைந்துள்ளதால் அடுத்தடுத்த படங்களிலும் நம்பர் நடிகையையே நடிக்க வைத்தார். இதனிடையில் நம்பர் நடிகை ரவுடி படத்தில் இயக்குனருடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமண தேதி குறிக்காமல் இணைந்து வாழ்கின்றனர். 

    மார்க்கெட் மற்றும் மவுசு உள்ளவரை தான் தமிழ் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதை நன்றாக புரிந்துக் கொண்ட நம்பர் நடிகை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நடிப்பில் முழு கவனம் செலுத்த இருப்பதாக தன் நட்பு வட்டாரங்களிடையே கூறி வருகிறாராம். இதனால் காதல் இயக்குனருக்கு ஏற்கனவே வருடங்கள் பல கடந்து விட்டதாகவும் இன்னும் எத்தனை காலத்திற்கு என்கிற வருத்தம் மேலோங்கி இருக்கிறதாம்.

    gossip

    இந்நிலையில் ஹிந்தி படம் ஒன்றை இயக்கி வரும் காப்பி இயக்குனர் நம்பர் நடிகையை தனது படத்தில் நடிக்குமாறு  தொடர்புக் கொண்டுள்ளார். கூட பிறக்காத சகோதரியாகவும் தனது ராசியான நடிகையாக அந்த நடிகையை பார்த்து வரும் காப்பி இயக்குநர் அவரது புகழ் தென்னிந்தியாவில் மட்டும் முடங்கி விடாமல், வட இந்தியாவிலும் பரவி பான் இந்திய நடிகை என்கிற அந்தஸ்த்தை அவர் பெற வேண்டும் என்கிற ஆசை அந்த இயக்குநருக்கு அதிகமாகவே இருக்கிறதாம். அதன் காரணமாகவே தனது படத்திலும் அவரை இணைத்துக் கொண்டார்.

    tamil cinema gossip

    நம்பர் நடிகையை வடஇந்தியாவிலும் பிரபலமாக்கும் முயற்சியில் நேரடியாக காப்பி இயக்குனர் இறங்கியுள்ளார். பல நிறுவனங்களுடன் நடிகைக்கு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுக்க அவருடைய தோற்றமும் நடிப்பையும் கண்டு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் காதல் இயக்குனர் கலக்கமடைந்துள்ளார்.

    actress gossip

    ஏற்கனவே கணவர் நடிகர் கடிவாளம் போட்டதால் தான் ஒரு நடிகை விவாகரத்து கேட்டு கம்பியை நீட்டி விட்டார் என்பதையும் நன்கு அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் காதல் இயக்குனர்  இந்த விவகாரத்தில் எந்தவொரு பிரச்சனையும் மனக்கசப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக பக்குவமாக பல விஷயங்களை செய்து வருகிறாராம்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....