Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பதில் பிரச்சினை : மூத்த தலைவர்கள் போர்க்கொடி!

    பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பதில் பிரச்சினை : மூத்த தலைவர்கள் போர்க்கொடி!

    பிரஷாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதற்கு காங்கிரஸின் மூத்த தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அவரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    2014ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் மீண்டு எழ முடியாமல் தவித்து வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கூட பரிதாபமாக தோற்று வெளியேறியது. அந்த கட்சிக்கு ஒரு நிரந்தர தலைமை வேண்டும் என்று அதன் மூத்த தலைவர்கள் நீண்ட நாட்களாக குரல் எழுப்பி வருகின்றனர். 

    இந்நிலையில் தான் பிரஷாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸை மேற்கு வங்காளத்திலும், திமுகவை தமிழ்நாட்டிலும் தன்னுடைய தேர்தல் ஆலோசனைகள் மூலம் ஆட்சியில் அமர வைத்தார். இதனால் பிரஷாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன்படி பிரஷாந்த் கிஷோரும் டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசி இருந்தார்.

    இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சியை எவ்வாறு பிரஷாந்த் கிஷோரால் வழிநடத்த முடியும். மேலும், அவர் மாநில கட்சிகளுக்கும் ஆலசோனை வழங்கி வருகிறார். அவரால் எப்படி காங்கிரசுக்கு அவரால் முழுமனதுடன் வேலை பார்க்க முடியும் ? என்று அவர்கள் கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது.  

    ஆனால் பிரஷாந்த் கிஷோர் வருகையினால் தங்களது பதவி பறிபோகுமா என்ற அச்சத்தில் தான் அவர்கள் அப்படி பேசுவதாக கட்சிக்குள் முணுமுணுப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்படி உட்கட்சி பூசல்கள் ஒருபுறம் நடந்தாலும், கடந்த 16 மற்றும் 18 தேதிகளில் பிரஷாந்த் கிஷோர் உடனான சந்திப்புகள் நடந்துள்ளன. நேற்று நடந்த மூன்றாவது சந்திப்பில் அந்தோணி, சிதம்பரம், அம்பிகா சோனி, திக்விஜய் சிங் மற்றும் முகுஸ்வானிக் போன்ற தலைவர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

    ஆனால், முதல் சந்திப்பில் உடன் இருந்த ராகுல் காந்தி இந்த சந்திப்பில் இல்லை என்றும், ஏதோ சொந்தகாரணமாக வெளிநாடு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....