Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்புளூட்டோவுக்கு பூமியை விட இது குறைவுதானாம், வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள்!

    புளூட்டோவுக்கு பூமியை விட இது குறைவுதானாம், வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள்!

    ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிகள் மேற்படும் போதுதான் அறியப்படாத கூறுகளும் உண்மைகளும் வெளிவருகின்றன. அவ்வாறாகத்தான், பல உண்மைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவ்வரிசையில்தான் இந்தியா, பிரேசில் மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் புதிய உண்மை ஒன்றை அறிய முடிந்திருக்கிறது. ஆம்! இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வின்படி, புளூட்டோவின் வளிமண்டல அழுத்தம் பூமியை விட 80,000 மடங்கு குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. 

    pluto

    இந்தியாவின் நைனித்தாலில் உள்ள தேவாஸ்தல் ஒளியியல் தொலைநோக்கிதான் இந்த அறிதலின் ஆணிவேர். 3.6மீ மற்றும் 1.3மீ தேவாஸ்தல் அதிவேக ஒளியியல் தொலைநோக்கி மூலம் கடந்த ஜூன் 6, 2020 அன்று ஒரு பிரகாசமான நட்சத்திரத்தின் முன் வரும் கிரகத்தைத்தை ஆராய்ச்சியாளர்கள் பூமியிலிருந்து பார்த்தனர். 

    nainital

    அந்த கிரகம் புளூட்டோவாகும். மேலும் புளூட்டோவின் துல்லியமான வளிமண்டல அழுத்தத்தை அடைய ஒளி வளைவுகளின் குறிகை-இரைச்சல் விகிதத்தை (signal-to-noise )  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது புளூட்டோவின் வளிமண்டல அழுத்தம் 12.23 μbar என்று கண்டறியப்பட்டது, இது பூமியில் இருக்கும் அழுத்தத்தை விட 80,000 மடங்கு குறைவாகும்.

    pluto

    ஆஸ்ட்ரோபிசிகல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், நைட்ரஜன் பனிக்கட்டியிலிருந்து வரும் நீராவி அழுத்தம் காரணமாக புளூட்டோவின் வளிமண்டல அழுத்தத்தில் பருவகால மாறுபாடு உள்ளது. மேலும், புளூட்டோ கிரகத்தின் துருவங்கள் சூரியனைச் சுற்றி 248 ஆண்டுகள் நீண்ட சுற்றுப்பாதையில் பல தசாப்தங்களாக நிரந்தர சூரிய ஒளி அல்லது நிரந்தர இருளில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....