Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவி தற்கொலை! காரணம் இதுதான்!

    நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவி தற்கொலை! காரணம் இதுதான்!

    தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் மாணவி சுவேதா.

    மாணவி கோவை சீரநாயக்கம் பாளையத்தை சேர்த்தவர் ஆவார். நீட் தேர்வு பயிற்சிக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் பாளையத்தை அடுத்த கொண்டயம் பாளையத்தில் உள்ள வாரி மெடிக்கல் அகாடமியில் படித்து வந்திருக்கிறார். இவருடன் காவியா, ப்ரியங்கா என்ற இரு மாணவிகளும் தங்கி படித்து வந்திருக்கின்றனர். மொத்தம் அந்த பயிற்சி மையத்தில் 160 பேர் பயின்று வந்திருக்கின்றனர். அதில் 65 பேர் மாணவிகள் ஆவர். 

    அங்கு படிக்கும் யோகேஸ்வரன் (வயது 18) என்ற மாணவனுடன் சுவேதா நெருங்கி பழகி வந்துள்ளார். எனவே இவர்களின் பெற்றோர்கள் கண்டித்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் யோகேஸ்வரனின் பெற்றோர் அவரின் படிப்பை நிறுத்தி சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று உடல்நல குறைவு காரணமாக சுவேதா வகுப்பிற்கு செல்லாமல் விடுதி அறையிலேயே தங்கியுள்ளார். காவியா, ப்ரியங்கா இருவரும் வகுப்புக்கு சென்றுள்ளனர். மாலை திரும்பும் போது சுவேதாவுக்கு உணவகத்திற்கு சென்று சாப்பாடு வாங்கிக் கொண்டு விடுதிக்கு திரும்பியுள்ளனர். 

    பின்பு சுவேதா இருக்கும் அறையை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தான் தெரிந்ததது சுவேதா தனது துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று. பின்பு வாடனுக்கு தெரிவித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். வரும் வழியிலேயே சுவேதா உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

    இதனை அடுத்து கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக விசாரித்த போது யோகேஸ்வரனுக்கும் சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

    மேலும் சுவேதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுவேதாவைக் கண்டித்ததால் தூக்கிட்டு கொண்டுள்ளாரா இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இந்த தற்கொலையில் இருக்கிறாதா என்று விசாரித்து வருகின்றனர் காவல் துறையினர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....