Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபோர்ச்சுக்கலை உலககோப்பைக்கு அழைத்துச் செல்கிறார் ரொனால்டோ : தலைமகன் வழியில் தலைமுறைகள்

    போர்ச்சுக்கலை உலககோப்பைக்கு அழைத்துச் செல்கிறார் ரொனால்டோ : தலைமகன் வழியில் தலைமுறைகள்

    கத்தார் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக உலகமெங்கும் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பிய அணிகள் சுற்றில் வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்குள் நுழைந்தது போர்ச்சுக்கல் அணி. இதன் மூலம் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிபா உலகக்கோப்பையில் 5வது முறையாக விளையாட இருக்கிறார்.

    இந்த வெற்றி குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ள ரொனால்டோ, இலக்கு நிறைவேறியது என்று குறிப்பிட்டுள்ளார். கத்தாரில் நடக்க உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம், அதுவே நாங்கள் இருக்க வேண்டிய தகுதியான இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    இந்த முறை வடக்கு மாசிடோனியா அணியை காப்பாற்ற யாராலும் முடியவில்லை. கடைசி நிமிடத்தில் ஆட்டத்தை மாற்றும் துருப்புகள் இந்த முறை வேலைக்கு ஆகவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை தான் பலேர்மோவில் நடந்த ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியன் இத்தாலி அணிக்கு எதிராக வெற்றி கண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 

    முதல் பாதி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பாஸை, நேர்த்தியாக கோலாக மாற்றினார் புரூனோ பெர்னாண்டஸ். மற்றொரு பாதியிலும் கோல் அடிக்க வடக்கு மாசிடோனியவால் எதுவும் செய்யமுடியாமல் போனது. 

    இது குறித்து பேசிய இரட்டை கோல் நாயகன் புரூனோ பெர்னாண்டஸ் இது எங்கள் அணிக்கு சிறப்பான வெற்றி, முக்கியமாக போர்ச்சுக்கல் அணி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் உலக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதால் இது எப்பொழுதும் எங்கள் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். 

    37 வயதாகும் ரொனால்டோ 2004ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 10 கால்பந்து வரலாற்றின் மிகப்பெரிய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 4 உலககோப்பை போட்டிகளும், 6 யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளும் அடங்கும். இவற்றில் 2016ஆம் ஆண்டு யூரோ சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

    கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்து சாதனை படைத்தவரான ரொனால்டோ, இது போன்ற பெரிய போட்டிகளில் 115 கோல்களை அடித்துள்ளார். அதன்படி மிகப்பெரிய தொடர்களின் இறுதிப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் குறைந்த பட்சம் ஒரு கோலாவது அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 

    இதுவே ரொனால்டோவுக்கு இறுதி உலகக்கோப்பை போட்டியாக இருக்கக்கூடும். எனவே, இந்த முறையும் அந்த சாதனை தொடரும் என்ற நம்பிக்கையுடன் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக காத்திருக்கலாம்.      

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....