Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நேபாள எல்லைக்குள் ஊடுருவல் : சீனா அத்துமீறல் !

    நேபாள எல்லைக்குள் ஊடுருவல் : சீனா அத்துமீறல் !

    தங்கள் நாட்டிற்குள் சீனா அத்துமீறி ஊடுருவி வருவதாக, நேபாள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேபாளத்திற்கு சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு இமயமலையை ஒட்டி சுமார் 1400 கிமீ நீளத்தில் உள்ளது. நேபாளம் சீனாவுடன் சுமுகமான உறவை மேம்படுத்தி கொள்ளவே ஆர்வம் காட்டி வந்தது. 1960ல்  சீனா மற்றும் நேபாளம்  நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளுமே தொலைதூரப் பகுதிகளாக இருப்பதால் அங்கு செல்வது எளிதல்ல.

    china border

    தரைப்பகுதியின்  எல்லையானது தூண்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப்பகுதி வரையறைகளைப் புரிந்துகொள்வதே கடினம்தான்.

    இந்நிலையில் நேபாளத்தின் ஹும்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதைப்பற்றி  முதன்முறையாக நேபாள அரசு தெரிவித்தது. .இருநாடுகளுக்கு  இடையே பொதுவான  எல்லை இருக்கும் நிலையில் சீனாவின் ஊடுருவலை ஏற்க முடியாத நேபாள அரசு சீனா அத்துமீறியதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.ஆனால் இதற்கு நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் எந்த பதிலும் அளிக்காமல் நிராகரித்துவிட்டது.

     

    border

    இதனை தொடர்ந்து நேபாள அரசு ஒரு பணிக்குழுவை ஏற்பாடு செய்தது. இந்தக்குழுவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் பிரதிநிதிகள் இருந்தனர்.நேபாள எல்லைப் பகுதியில் உள்ள லாலுங்ஜோங் பகுதி இமய மலைக்கு அருகில் இருப்பதால் பாரம்பரியமாக யாத்ரீகர்களை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக இது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் புனிதமான இடம்.

    china

    ஆனால், இந்தப் பகுதியில் சமய நடவடிக்கைகளை கூட சீனப் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாக நேபாள அரசின் பணிக்குழுக்கு தெரிவித்துள்ளது . மேலும், நேபாள விவசாயிகளின் கால்நடை மேய்ச்சலை சீனா கட்டுப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சில பகுதிகளில் சீனா எல்லைத் தூண் அருகே வேலி அமைத்து, நேபாளப் பகுதியில் கால்வாயை ஒட்டி சாலை அமைக்க முயற்சிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....