Friday, March 31, 2023
மேலும்
    Homeஅறிவியல்ராக்கெட் ஏவுகணையில் சீனா படைத்த புது சாதனை!

    ராக்கெட் ஏவுகணையில் சீனா படைத்த புது சாதனை!

    பொதுவாக குறைந்த செலவிலும் குறைந்த எரிபொருள் பயன்படுத்தியும்  ஒரு ராக்கெட்டில் அதிக செயற்கைக் கோள்களை உலக நாடுகள் அனுப்புவது வழக்கம் தான். ஆனால் இதில் சீனா புது உலக சாதனையைச் செய்து உள்ளது.

    22 செயற்கை கோள்களை உள்ளடக்கிய ராக்கெட்டை பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது சீனா. இது உலக நாடுகளிடையே பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

    சீனாவின் வெஹிகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த லாங் மார்ச் 8 ராக்கெட் 5000 கிலோ எடையும் 700 கிமீ பூமியின் சுற்று வட்டப் பாதையில் சூரியனுக்கு ஒத்திசைவான திசையில் செலுத்தப் பட்டிருக்கிறது. மேலும் இந்த ராக்கெட் 52 மீட்டர் உயரம் கொண்டது. இது உலகின் மிகப் பெரிய ராக்கெட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.long march 8 rocket

    மேலும் இது மீண்டும் பயன்படுத்தக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிலை மற்றும் பூஸ்டர்கள் செங்குத்தான தரையிறக்கம் மூலம் மீட்டெடுக்கப்படும் என சீனா குளோபல் டெலிவிஷன் நெட்ஒர்க் (CGTN) தெரிவித்துள்ளது.

    வணிக சேவைகள், கடல் சுற்றுச் சூழல் கண்காணிப்பு, காட்டு தீ அணைப்பு என  புகைப்படங்களை எடுப்பதற்காகவும் மற்றும் பல்வேறுபட்ட திட்டங்களுக்காகவும் இந்த லாங் மார்ச் ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த ஏவுகணை நிகழ்வு சீனாவின் தெற்கு ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்கலம் ஏவும் தளத்தில் இருந்து சரியாக பெய்ஜிங்கின் நேரப்படி காலை 11:06 க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்தச் சாதனை உலக மக்கள் மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. பிற்காலத்தில், ராக்கெட் ஏவுகணை சாதனையில் இந்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ipl

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான...