Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்டிக்டாக்கை தடை செய்ய அமெரிக்க அரசு முயற்சி; குற்றம் சாட்டிய சீனா

    டிக்டாக்கை தடை செய்ய அமெரிக்க அரசு முயற்சி; குற்றம் சாட்டிய சீனா

    டிக்டாக் பங்குகளை விற்றுவிட அமெரிக்க அரசு வலியுறுத்துவாக சீன அரசு தெரிவித்துள்ளது. 

    உலக நாடுகளில் மிகவும் பிரபலமாக இயங்கி வரும் செயலியாக சீனாவின் டிக்டாக் உள்ளது. ஆனால், இந்தியாவில்  3 ஆண்டுகளுக்கு முன்னர் . இந்த சீன செயலி இந்தியர்களின் தரவுகளை களவாடுவதாகவும், தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. 

    இப்போது, இப்படியான ஒரு சூழல் அமெரிக்காவில் எழுந்துள்ளது. இதனால், டிக்டாக் நெருக்கடியை சந்தித்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில், கடந்த டிசம்பர் முதலே டிக்டாக் செயலிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    வெள்ளை மாளிகையில் தொடங்கி, பாதுகாப்பு துறையினர் வரை டிக்டாக் செயலிகளை பயன்படுத்த அமெரிக்க தடை விதித்தது. பின்னர் அரசு டிஜிட்டல் சாதனங்கள் அனைத்துக்கும் இந்த தடை விரிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் வாயிலாக, சீனா சேகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், டிக்டாக் பங்குகளை விற்றுவிடுமாறு அதன் சீன உரிமையாளர்களுக்கு அமெரிக்கா நெருக்கடி தந்து வருவதாக சீனா தற்போது குற்றம் சாட்டி வருகிறது.

    அமெரிக்க மண்ணில் அந்நிய தேசத்தினருக்கான வணிக உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், அங்கே வெளிப்படையான வணிக செயல்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் இன்று வெளிப்படையாக குற்றம்சாட்டி உள்ளனர். 

    பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா; வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....