Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தை லாக் டவுன் கடத்தல் - 3 பேர் கைது 

    குழந்தை லாக் டவுன் கடத்தல் – 3 பேர் கைது 

    சென்னையில் குழந்தை லாக் டவுன் கடத்தியதற்காக 3 பேரை தனிப்படை காவல் துறையினர்  கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    tamil nadu

    சென்னை அம்பத்தூரில் காந்தி நகருக்கு அருகே புதிதாக அடுக்குமாடி கட்டிட பணி நடந்து வருகிறது. இங்கே ஒடிஸாவை சேர்ந்த தம்பதியினர் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் பிறந்ததால் லாக் டவுன் என்ற பெயரில் 1½ வயது குழந்தையும் இருக்கிறது. இந்த குழந்தை அடையாளம் தெரியாத நபரால்  கடத்தப்பட்டது.

    police

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தை காணாமல் போனதால், குழந்தையின் பெற்றோர் பதறியடித்து தேடினர். குழந்தை எங்கும் கிடைக்காததால் காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காவல் துறையினர் 8 காவல் வீரர்களை வைத்து உடனடியாக ஒரு தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தன. கட்டிடப்பணி நடக்கும் இடத்தில் உள்ள சிசிடிவி கேமெராவையும் ஆய்வு செய்யப்பட்டது. இதனிடையே கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகியுள்ளதை கைப்பற்றிய காவல்துறையினர் உடனடியாகவே அங்கு செண்று குழந்தையை மீட்டனர். 

    ambattur station

    இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக பாலமுருகன், சுஷாந்த பிரஷாந்த் மற்றும் வளர்மதியை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் பாலமுருகன் என்பவர் அதே கட்டிடத்தில் பணிபுரிபவராகவும், மறைமலைநகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஒடிஸாவை சேர்ந்த சுஷாந்த பிரஷாந்த் என்பவர் அதே கட்டிடப்பணியில் மேலாளராக பணிபுரிகிறார். இதில் வளர்மதி என்பவர் கடலூரைச் சேர்ந்தவர்.lock இவர்கள் மூவரும் அங்கு கட்டிடப்  பணியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஒடிசாவை சேர்ந்த சுஷாந்த பிரஷாந்த் என்பவரின் உதவியின்  மூலமாக தான் குழந்தை லாக் டவுனை கடத்தியிருக்கிறார்கள். இவர்கள் குழந்தையை விற்பதற்காக கடத்தப்பட்டதாக தெரியவருகிறது.  ஆனால் கடத்தலுக்கான முழுமையான  காரணத்தை காவல் துறையினர் தெரிவிக்கவில்லை.  இதற்கான முழு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை அறிவித்துள்ளது. சைபர் க்ரைம் மூலமாக குழந்தை கோயம்பேட்டில் இருப்பதை அறிந்துக் கொண்ட காவல்துறையினர் அதிவேகமாக செயல்பட்டு  குழந்தையை காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...