Monday, March 27, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தேர்தலில் மு.க.அழகிரி வெற்றியை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள முதல்வர்!!!

    தேர்தலில் மு.க.அழகிரி வெற்றியை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள முதல்வர்!!!

    மதுரை: மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர் பானு முபாரக் வெற்றி பெற்றுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.

    stalin

    கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றனர். இதில், திமுகவை சேர்ந்த ஒருவர் தான் மதுரையின் மேயர் என்பது உறுதியாகியுள்ளது.

    இந்தநேரத்தில், மதுரை 47-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு போட்டியிட்டார். போட்டியிட்ட முபாரக் மந்திரியின் மனைவி பானு, பாஜக வேட்பாளரை விட 2,270 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    MK alagiri

    இதனால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திமுக ஆட்சிக்கு வரும்போது மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி இணைய போவதாக தகவல் வெளியானது. அதேசமயத்தில், திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளை மு.க.அழகிரி குறைத்துக் கொண்டுள்ளார்.

    இப்படி இருக்க மதுரை தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெறச்செயததன் மூலம் ‘மு.க.ஸ்டாலினுடன் அழகிரி மீண்டும் மோதல் போக்கை தொடர்கிறாரோ’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...