Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மின்வெட்டு பிரச்சனையால் ஆட்சி பறிபோனதை முதல்வர் நன்றாகவே அறிவார் - ஓ.பன்னீர்செல்வம் சூசகம்!

    மின்வெட்டு பிரச்சனையால் ஆட்சி பறிபோனதை முதல்வர் நன்றாகவே அறிவார் – ஓ.பன்னீர்செல்வம் சூசகம்!

    தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருவதை முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்தில் கொண்டு, உடனடியாக தீர்வு காண வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். மின்வெட்டால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆங்காங்கே நிகழும் மின் துண்டிப்பால், ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு பதிலளித்தார். தீர்மானம் முடிந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே, தமிழகம் முழுவதும் பரவலாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொது மக்களுக்கும், மின்சார ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மத்திய அரசு சரியான முறையில் நிலக்கரி வழங்கவில்லை எனவும், அதன் காரணமாகத் தான் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்துறை அமைச்சர் கூறினார்.

    நிலக்கரி பிரச்சனை கடந்த வருடத்திலிருந்தே இருக்கிறது. கோடையில் மின் தேவை அதிகரிக்க கூடும் என்பதை அறிந்து, முன்கூட்டியே நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருக்க வேண்டும்.

    நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தும், குறைந்த அளவிலான இரயில் பெட்டிகளின் காரணமாக, நிலக்கரியை கொண்டு வர முடியவில்லை என முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதன் வாயிலாக, திமுக அரசு, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், சிக்கலான இந்நிலைமை சரியாகி விட்டதாக அமைச்சர் நேற்று தெரிவித்து இருக்கிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன், மின்வெட்டு பிரச்சனையால் ஆட்சி பறிபோனதை முதல்வர் நன்றாகவே அறிவார். உடனடியாக முதல்வர் தலையிட்டு, மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் முற்றிலுமாக தீர்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படியுங்கள், தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு: இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

    ஆறு மணி நேரம் வரை நீடித்த மின்வெட்டு; ‘இனி இப்படி நிகழக்கூடாது’ – எச்சரித்த ராமதாஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....