Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபயமுறுத்திய லியாம் லிவிங்ஸ்டன்; ஆறுதல் தந்த தல தோனி!

    பயமுறுத்திய லியாம் லிவிங்ஸ்டன்; ஆறுதல் தந்த தல தோனி!

    நடைபெற்றுக்கொண்டிருக்கும் 15-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தோல்விப்பயணம் தொடர்ந்துக்கொண்டே இருக்க, சென்னை அணிக்கு வெற்றி வருமா என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் சென்னைக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டித்தொடங்கியது. 

    முதல் இன்னிங்ஸ் 

    டாஸ் வென்று ஆரம்பத்திலேயே நம்பிக்கைத் தந்த சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆதலால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் அனைவரையும் அசத்த, அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை முகேஷிடம் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இந்த விக்கெட்டானது பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பஞ்சாப் மீள்வதற்குள் கடந்த போட்டியில் வெறித்தனம் காட்டிய ராஜபக்சே ரன் அவுட் ஆகி வெளியேறினார். மகேந்திர சிங் தோனியின் சாதுரியத்தால் இந்த ரன் அவுட் சுலபமாக நிகழ்ந்துவிட்டது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் தவான் ரன்கள் அடித்துக்கொண்டிருந்தார். தவானுடன் கைக்கோர்த்த லியாம் லிவிங்ஸ்டன் அணியை சரிவில் இருந்து மீட்டார். தவான் 33 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இதற்கு அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா 17 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க, அதன்பிறகு வந்த விக்கெட்டுகளும் சிறிய இடைவெளியில் சிறிய ரன்களில் தொடர்ந்து சரிந்தன. இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

    இரண்டாம் இன்னிங்ஸ் 

    181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆனால், சென்னை அணி தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 

    ஆம்! ராபின் உத்தப்பா 13 ரன்கள் அடித்து வெளியேற, ருத்ராஜ் கெய்க்வாட் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து இந்த போட்டியிலும் ரசிகர்களை ஏமாற்றினார். இதற்கு பின் வந்த மொயின் அலி டக் அவுட்டாக, அம்பத்தி ராயுடுவும் 13 ரன்களுக்கே பெவிலியன் திரும்பிவிட்டார்.

    அதிர்ச்சிகளின் பட்டியல்கள் முடிந்ததா என்றுப்பார்த்தால், களத்திற்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடஜாவும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சென்னை அணி முற்றிலுமாய் துவண்டுப்போனது.

    இந்நிலையில், சிவம் துபே மற்றும் தோனி துவண்ட சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல் தந்தனர். சிவம் துபே 57 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய தோனி 28 பந்துகளுக்கு 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராகுல் சஹாரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு சென்னை அணி தோல்வியை உறுதி செய்தது.

    18 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சென்னை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே சென்னை அணி தோல்வியத் தழுவியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....