Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதோனி தந்த நம்பிக்கை; சென்னை சிங்கங்களின் வெற்றி பாய்ச்சல் தொடருமா?

    தோனி தந்த நம்பிக்கை; சென்னை சிங்கங்களின் வெற்றி பாய்ச்சல் தொடருமா?

    ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி ஏழு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் இரு போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.

    இரு அணிகளுக்குமே இனி நடைபெற  இருக்கும் அத்தனை போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஒரு தோல்விக்கூட இரு அணிகளையும் ப்ளே ஆஃபிற்குள் நுழைய முடியாத சூழலை உருவாக்கிவிடும். இப்படியான சூழலில்தான் இன்றையப் போட்டி நடைபெற இருக்கிறது. 

    பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய விதமானது மிகவும் சொதப்பலாய் அமைந்திருந்தது. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை கடந்தப் போட்டியில் வீழ்த்திய விதமானது சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது. 

    தோனி மும்பைக்கு எதிரான ஆட்டத்தை நிறைவு செய்த விதம் இன்னமும் ரசிகர்களின் நினைவலைகளில் தீபாவளியாக இருக்கிறது. தோனி தந்துள்ள நம்பிக்கைதான், சென்னை அணியின் நம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 

    தற்போதைய நிலைமையை பொறுத்தமட்டில், சென்னை அணியானது பஞ்சாப் அணியை விட பலம் பொருந்திய ஒன்றாகவே இருக்கிறது. ஆகவே, இன்றையப் போட்டியில் சென்னை அணியின் வெற்றி பாய்ச்சல் தொடரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளிலுமே, கேப்டன்கள் சரிவிர முழு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. 

    மேலும், இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் பஞ்சாப் கிங்ஸ் 11 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 முறையும் வெற்றியைப் பெற்றுள்ளன. இன்றையப் போட்டியில் தவான் 59 ரன்கள் அடித்தாரென்றால், அவர் சென்னை அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை அடித்த பெருமையை பெறுவார்.

    15 ஆவது ஐபிஎல் தொடரின் 38 ஆவது போட்டியாக நடைபெற இருக்கும் இப்போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

    எந்த அணி தனது ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான கதவை திறக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

    இதையும் படிங்க; தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; ‘மீட்பராக’ இருப்பாரா உலகநாயகன்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....