Monday, March 18, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்எரிக்கிற வெயிலில் மழையை வேண்டியவர்களுக்கு வானிலை மையம் சொன்ன, நற்செய்தி! - விவரம் உள்ளே!

    எரிக்கிற வெயிலில் மழையை வேண்டியவர்களுக்கு வானிலை மையம் சொன்ன, நற்செய்தி! – விவரம் உள்ளே!

    நாம் தற்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் இக்காலத்தை கடும் வெயில் காலம் என்றே கூற தோன்றுகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் பிறக்காத நிலையில், சித்திரை மாதம் இன்னும் தொடங்காத நிலையில் கடும் வெயில் என்ற சொல்லாடல் நம்மின் பலரிடத்திலும் தோன்றியாயிற்று. தோன்றக்கூடிய வகையில்தான் சூரியன் நம்மை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. 

    இந்த சுட்டெரித்தலை கொஞ்சமேனும் குறைக்க சிறிதளவேனும் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பலரிடத்திலும் தோன்றியிருக்கும். அப்படியான எண்ணம் வானிலைக்கும் தோன்றியிருக்கிறது என்பதுப்போல், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிவிப்பின்படி,  உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று  உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதோடு, நாளை முதல் 09.04.2022 வரையிலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    மீன்பிடிக்க எச்சரிக்கை 

    இன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, மீனவர்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    நாளை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும்,  அதற்கு அடுத்த இரு நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க போகவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வானிலை அறிக்கையில் இதையெல்லாம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? வியப்பூட்டும் தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....