Friday, April 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபரோட்டா சாப்பிட்ட சென்னை இளைஞர் பலி

    பரோட்டா சாப்பிட்ட சென்னை இளைஞர் பலி

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை வியாசர்பாடியை அடுத்த சர்மா நகர் 2-ஆவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 27). இவர் கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு கார்த்திக்கிற்கு பரோட்டா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தனர். கார்த்திக்கும் அந்த பரோட்டாவை உண்டு விட்டு உறங்க சென்றுள்ளார்.

    அப்போது, இரவு 11 மணியளவில் கார்த்திக்கிற்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறி அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    மயக்க நிலையில் இருந்த கார்த்திக்கை ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உயிர் முன்னதாகவே பிரிந்துவிட்டது என்று கூறினர். இச்செய்தியை கேட்ட அக்குடும்பத்தினர் கதறி அழுதனர் .

    மேலும், இதைத்தொடர்ந்து நேற்று இரவு கார்த்திக் பரோட்டா உண்ட பிறகு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜூஸ் ஒன்றை பருகியுள்ளார். பிறகு ,ஏதும் உண்ணவில்லை என்று தெரியவருகிறது. ஆனால், குடும்பத்தினர் அனைவரும் பரோட்டா உண்டபிறகு உறங்க சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, மற்றவர்களுக்கு எந்த ஒரு உடல்நிலை பாதிப்பும் ஏற்படாதா நிலையில் கார்த்திக்கின் உயிர் பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது, கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வியாசர்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கான தடையை எதிர்த்து மனுக்கள்; விரைவில் விசாரணை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....