Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

    சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை தெரிவித்திருந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து புகாரை எடுத்தது. இதையடுத்து கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, இந்தப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். 

    இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியுள்ளனர். 

    அந்தக் கடிதத்தில், பாலியல் தொல்லை அளித்துவரும் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் 4 மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

    இதனிடையே, இன்று தமிழ்நாடு மகளிர் ஆணையம் கலாஷேத்ரா மாணவிகளிடம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய திருப்பு முனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....