Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை கபாலீசுவரர் கோயில் சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை அறிக்கை!

    சென்னை கபாலீசுவரர் கோயில் சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை அறிக்கை!

    சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்து சமைய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான லஸ் சர்ச் சாலை இடத்தில் 3 கிரவுண்ட் 736.5 சதுர அடியில் அமைந்துள்ள ரானடே நூலகத்திற்கு தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை உத்தரவின் அடிப்படையில் தனியே வாடகை நிர்ணயம் செய்து திருக்கோயிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது. ரானடே நூலகத்திற்கு நியாய வாடகை 0.1 சதவிகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது.

    மேற்படி நிறுவனம் தற்போது கட்டிடத்தின் மாடி பகுதியில் வணிக நோக்கில் பட்டய வகுப்பு, கச்சேரி ஆகியவற்றிற்கு வாடகைக்குவிட்டு வாடகை வசூல் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் இயங்கி வரும் கட்டிடத்தின் முதல் மாடியில் மேற்கூரையை அகற்றிவிட்டு தளத்துடன் கூடிய முதல் தளம் கட்டிடம் கட்ட துறை மற்றும் திருக்கோயிலுக்கு மனு செய்து அனுமதி உத்தரவு வழங்கும் முன்பாகவே, அனுமதியின்றி முதல் தளம் கட்ட முயற்சி செய்யப்பட்டதை தொடர்ந்து விளக்கங்கள் கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டு, உரிய கால அவகாசம், வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அந்நிறுவனம் விளக்கம் ஏதும் அளிக்காமல் துறை விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி பெறாமல் வர்தா புயல் கால கட்டத்தில் திருக்கோயில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    மேற்படி நிறுவனத்தின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அரசாணைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி திருக்கோயிலுக்குச் சொந்தமான அனைத்து கட்டிடங்கள்/ மனைகளுக்கு நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டது.

    ரானடே நிறுவனத்தாருக்கும் உபயோகபடுத்தியமைக்கான நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டது. நிறுவனத்தார் நியாய வாடகையை செலுத்தாததால் நேற்று சொத்தில் பொருட்களுடன் சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் நியாய வாடகை நிலுவையாக ரூபாய் 79,10,860 உள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 18 கிரவுண்ட் 2ஆயிரத்து 364 சதுர அடி பரப்பளவுள்ள மனை, மயிலாப்பூர் கிளப் நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில் குத்தகைக்கு விடப்பட்டது.

    கிளப் நிறுவனம் வாடகை நிலுவைத் தொகையின் ஒரு பகுதியாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை கோவில் நிர்வாகத்திடம் வழங்கியது. ஆனால், வாடகை நிலுவைத்தொகை 4 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதால் மயிலாப்பூர் கிளப் நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் தங்க மங்கை: கெத்து காட்டிய நிகத் ஜரீன் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....