Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டில் மாற்றுப்பாதை - சென்னை வருவோரின் கவனத்திற்கு

    செங்கல்பட்டில் மாற்றுப்பாதை – சென்னை வருவோரின் கவனத்திற்கு

    செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு மாத காலத்திற்கு சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    chengalpattu

    செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த 7-ம் தேதி அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக சென்னை திருச்சி மார்க்கத்தில் செல்லும் முக்கிய சாலையில் தவிர்க்க முடியாத பாலமாக செங்கல்பட்டு பாலம் அமைந்திருக்கிறது. வார நாட்களில் சராசரியாக  50,000 வாகனங்களும், வார இறுதியில் 1 லட்சம் வாகனங்களும் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றது.

    bridge

    தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் வாகனங்கள் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்திலே செல்லலாம் எனவும், அதே நேரம் திருச்சியிலிருந்து செல்லும் வாகனங்கள் பழைய பாலத்தை பயன்படுத்தாமல் மாற்று பாதையில் புக்கத்துறை, நெல்வாய் கூட்ரோடு, திருமுக்கூடல், திம்மாவரம், வழியாக செங்கல்பட்டு  செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.  அல்லது மாமண்டூர் , மெய்யூர், ஓர்காட்டுப்பேட்டை, பழத்தோட்டம் , செங்கல்பட்டு  வழியாகவும் செங்கல்பட்டு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. trafficஇதைத் தவிர  திம்மாவரம், கிழக்கு கடற்கரை சாலைய வழியாகவும் சென்னை வரலாம். மேலும் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் பிரதான சாலையில் ஈசூர் வல்லிபுரம் இடையே பாலாற்று பாலம் உள்ளது. இந்த சாலையையும் மாற்று பாதை செல்ல அருவுறுத்தப்பட்டிருந்த நிலையில்   இந்த பாலமும் கொஞ்சம் பழுதடைந்து  உள்  வாங்கியதால் கனரக வாகனங்கள் மட்டும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.   மாற்று பாதையால் வாகனங்களுக்கு கூடுதலாக 18 முதல் 20 கிமி வரை தொலைவு உண்டாகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....