Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆறு போட்டியில் ஐந்து முறை இறுதிச்சுற்றுக்கு சென்ற செல்சியா அணி ; இம்முறை சாதிக்குமா?

    ஆறு போட்டியில் ஐந்து முறை இறுதிச்சுற்றுக்கு சென்ற செல்சியா அணி ; இம்முறை சாதிக்குமா?

    கிறிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி எஃப்ஏ கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது செல்சியா அணி. இறுதிப்போட்டியில் மின்னல் வேகஆட்டக்கார்களை கொண்ட லிவர்பூல் அணியை சந்திக்கிறது, செல்சியா அணி. 

    எஃப்ஏ கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டியானது வெம்ப்ளே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் செல்சியா அணியும், கிறிஸ்டல் பேலஸ் அணியும் கடுமையாக மோதிக்கொண்டன. 

    பரபரப்பான இந்த அரையிறுதி ஆட்டத்தில், கிறிஸ்டல் பேலஸ் அணியின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் செல்சியா கடுமையாக திணறியது. ஆனால், கடும் போராட்டத்துக்கு பின்னர் கிரிஸ்டல் பேலஸ் அணியினரின் தடுப்பாட்டத்தை உடைத்த செல்சியா அணியினர் அதனை கோலாகவும் மாற்றினார். அந்த அணிக்கு 65வது நிமிடத்தில் ரூபென் லாப்டஸ் சீக் முதல் கோலை அடித்து கொடுத்தார். 

    அடுத்த சில நிமிடங்களிலேயே மேசன் மவுண்ட் 76வது நிமிடத்தில் கோல் அடித்து 2-0 என செல்சியா அணிக்கு முன்னிலை கொடுத்தார். எஃப்ஏ கோப்பை தொடரில் செல்சியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடந்த ஆறு வருடங்களில் இது ஐந்தாவது முறை ஆகும். 2020ல் ஆர்செனல் அணியிடமும், 2021ல் லெய்செஸ்டர் அணியிடமும் செல்சியா அணி கடுமையாக தோற்றதால் இந்த முறை வெற்றியை வசப்படுத்தும் முனைப்பில் உள்ளது. 

    இந்த 16வது எஃப்ஏ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றால் அது செல்சியா அணிக்கு இந்த தொடரில் 9வது கோப்பையாக அமையும். கடந்த செவ்வாய்க்கிழமை சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணியிடம் தோற்றதற்கு பிறகு இந்த வெற்றி புது நம்பிக்கையை கொடுக்கும். 3 கோல்கள் அடித்தும் முந்தைய போட்டிகளின் கோல் கணக்கின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டது செல்சியா அணி. 

    செல்சியா அணியின் பயிற்சியாளர் டச்செல், சாம்பியன்ஸ் லீக் மற்றும் யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பைகளை வென்றிருந்தாலும் அவருக்கு செல்சியா அணியை உள்ளூர் போட்டித் தொடர்களில் வழிநடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை செல்சியாவின்  உரிமத்தை வைத்திருந்த ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் அப்ரோமோவிச் மீது, பிரிட்டிஷ் அரசாங்கம் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இதனால், செல்சியாவை வாங்க மூன்று புதிய கூட்டமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

    எனவே, செல்சியா அணி வெம்ப்ளே மைதானத்தில் தனது அடுத்த போட்டியில் புது உரிமையாளருடன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. வருகின்ற மே 14ஆம் தேதி எஃப்ஏ கோப்பை இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணியை எதிர்கொள்கிறது. சேடியோ மானே மற்றும் முகமது சாலா இணையை செல்சியா எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....