Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்மின்சார பிரச்சனை தீருமா, 10 ஆயிரம் கோடி ஐபோன்கள், ஊக்கத்தொகை திட்டம் மேலும் பல செய்திகள்...

    மின்சார பிரச்சனை தீருமா, 10 ஆயிரம் கோடி ஐபோன்கள், ஊக்கத்தொகை திட்டம் மேலும் பல செய்திகள் உள்ளே!

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு, தீராத பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், தமிழக மின்சாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், நிலக்கரி இறக்குமதியை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாநிலங்கள் அதிகரிக்க வேண்டுமென, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நிலக்கரியின் விலை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பானது, நிலக்கரி விலையை மேலும் கூட்டுவதாக அமைகிறது.

    மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம், தடைபட்டதால் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில், தமிழகமெங்கும் மின்வெட்டுப் பிரச்சனை ஏற்பட்டது. கோடையில், மின்சாரத் தேவை அதிகரிப்பதே இதற்கு காரணம் என தமிழக மின்சாரத் துறை கூறியுள்ளது.

    ஏர் ஏசியா

    விமானப் போக்குவரத்தில் முன்னணி நிறுவனமான ஏர் ஏசியா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் 84% பங்குகளை கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பங்குகள், மலேசியாவில் உள்ள ஏர் ஏசியா நிறுவனத்திடம் உள்ளது. டாடா நிறுவனத்தின் ஏா் இந்தியா, செயல்பாட்டு செலவுகளை முடிந்த அளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது‌. பட்ஜெட் கேரியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸூடன், ஏர் ஏசியா இந்தியாவை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைக்கு, போட்டி கண்காணிப்பாளர்களின் சம்மதத்தை பெறுவதற்கு, ஏர் இந்தியா, இந்திய போட்டி ஆணையத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

    போஸ்ட் பேமெண்ட்ஸ்

    நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவையினை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு கூடுதல் மூலதனத்தை அளிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

    அதன்படி, ரூ.820 கோடியை மூலதனமாக அளிக்க முன்வந்துள்ளது மத்திய அரசு. தற்போதைய சூழலில், நாட்டில் உள்ள 1.56 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ள அஞ்சல் நிலையங்களில், 1.30 லட்சம் அஞ்சல் நிலையங்களில் மட்டுமே இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் பயன்பாட்டில் உள்ளது.

    10 ஆயிரம் கோடி ஐபோன்கள்

    ஊக்கத்தொகை திட்டத்தின் இரண்டாவது ஆண்டான இந்த நிதியாண்டில், இந்தியாவில் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க ஐபோன்களை ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்கள், தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்களான விஸ்ட்ரான் மற்றும் பாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்கள் நம் நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி அளவு மதிப்பிலான, ஐபோன்களை தயாரித்து இருந்தன.

    இயக்குனர் செல்வராகவன் எழுதிய பாடலா இது? இப்படி அசத்தியிருக்கிறாரே…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....