Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாஉச்சத்தில் கோடை வெயிலின் தாக்கம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!!

  உச்சத்தில் கோடை வெயிலின் தாக்கம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!!

  கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

  இந்தியா முழுவதிலும், கோடைகால வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. நாட்டின் பல மாநிலங்களில், வெயிலின் தாக்கம், தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோடையின் இன்னலில் இருந்து, மக்கள் தப்பித்துக் கொள்ள, கோடை விடுமுறை என்ற பெயரில் பல சுற்றுலாத் தலங்களுக்கு செல்கின்றனர். கோடையில், சருமப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பழங்களை அதிகளவு உட்கொள்வது மிகச் சிறந்தது.

  கோடை வெப்பத்தின் தாக்கம் குறித்து, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், வருடந்தோறும் கோடை காலத்திற்கு முன்பாக, மாநிலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைப்பது வழக்கம். இந்த வருடமும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிகளவு வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளை சமாளித்து தற்காத்துக் கொள்வதே இதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

  வெப்ப அலைகளால் உருவாகும் அனல் காற்றின் தாக்கத்தால், பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை இதன் மூலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வைக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  குறிப்பாக, மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை உருவாக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் தொடர்ந்து இயங்க, தடையற்ற மின்சார விநியோகத்திற்கு சோலார்த் தகடுகளை நிறுவ வேண்டும். உட்புறமாக வெப்பநிலை அளவைக் குறைக்க குளிரூட்டும் கூரைகள் மற்றும் ஜன்னல் மறைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கோடையில் ஏற்படும் சரும பாதிப்பகளை குணப்படுத்த, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஐ.பி. திரவம் உள்படத் தேவையான சாதனங்கள் தேவையான அளவில் கையிருப்பில் இருப்பதை ஆய்வு செய்து, தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க; பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம், வாய்ப்பு கொடுங்கள்: மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....