Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉலக அளவில் சாதித்த பிரக்ஞானந்தா ; குவியும் வாழ்த்துகள்!

    உலக அளவில் சாதித்த பிரக்ஞானந்தா ; குவியும் வாழ்த்துகள்!

    ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டித் தொடர் காணொளி காட்சிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்றனர். 

    chess

    இப்போட்டியின் எட்டாவது சுற்றில் தலைச்சிறந்த சதுரங்க விளையாட்டு வீரரும், உலக அளவில் சதுரங்க விளையாட்டு வீரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்க்கொண்டார். மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான இப்போட்டியில் பிரக்ஞானந்தா கார்ல்சன் அவர்களை 39 நகர்வுகளில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றி உலகெங்கிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    mk stalin

    சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த – தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க விளையாட்டு ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், பிரக்ஞானந்தாவுக்கு மென்மேலும் வெற்றிகள் குவியவும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

    sachin tendulkar

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்நிகழ்வு என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது ​​மாயாஜாலம். மென்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் என்றும் இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என்றும்ன்றும் பதிவிட்டுள்ளார். 

    anbumani ramadoss

    பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், பதினாறு வயதே நிரம்பிய நம்மின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை எட்டாவது சுற்றில் வீழ்த்தியமைக்கு வாழ்த்துகள் என்றும், பிரக்ஞானந்தாவின் வெற்றிப்பயணம் தொடரவும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார், 

    இளம் வீரரான பிரக்ஞானந்தாவின் வெற்றியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் என நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளார். வெற்றிகள் தொடரட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவே பெருமைக்கொள்ளும்படி அற்புதமான ஒரு வெற்றியை பதித்த பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

    இவர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை பிரக்ஞானந்தாவிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....