Wednesday, April 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கான தடையை எதிர்த்து மனுக்கள்; விரைவில் விசாரணை!

    குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கான தடையை எதிர்த்து மனுக்கள்; விரைவில் விசாரணை!

    பிபிசி ஆவண படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.

    குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் நடைபெற்றது. இக்கலவரம் நடைபெறும் போது குஜராத் முதல்வராக இருந்தார். இந்தக் கலவரம் தொடர்பாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப் படத்தை கடந்த வாரம் வெளியிட்டது. 

    இந்த ஆவணப்படம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. இந்நிலையில், பிபிசி ஆவண படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் பதிவாகி வருகின்றன. 

    இதுக்குறித்து தாக்கல் செய்யப்பட்டு வரும் மனுக்களில், “பிபிசியின் ஆவண படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அடிப்படை உரிமை மீறல் ஆகும். இந்த தடையை நீக்க வேண்டும். ஆவண படத்தில் பிபிசி வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்றும் கோரப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த மனுக்களை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் மனுதாரர்கள் தரப்பில் நேற்று முறையிடப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி வருகிற பிப்ரவரி 6-ம் தேதி மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    இந்தியாவுக்காக விளையாடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் ஓய்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....