Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு அருகே லாரி மீது கார் மோதல்; தந்தை மற்றும் பச்சிளங் குழந்தை உயிரிழப்பு!

    செங்கல்பட்டு அருகே லாரி மீது கார் மோதல்; தந்தை மற்றும் பச்சிளங் குழந்தை உயிரிழப்பு!

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே புக்கதுறை கூட்டு சாலை உள்ளது. இந்த சாலைக்கு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த 28 வயதான அஸ்வினிகுமார், சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் மதுரையில் இருந்து காரில் வந்துள்ளார்.

    அஸ்வினிகுமார், 23 வயதான மனைவி சிவபாக்கியம், 2 வயது நிரம்பிய அவருடைய மகள் திவானா மற்றும் அவரது ஆறு மாத ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக சென்னைக்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அதிகாலையில் மதுரையை நோக்கி புறப்பட்டுள்ளார்.

    அப்போது, செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த புக்கத்துறை கூட்டு சாலை அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, அஸ்வினிகுமார் ஓட்டி வந்த கார் நிலை தடுமாறி மோதியது. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் விபத்தில், காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது. இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    இந்தக் கோர விபத்தில், காரை ஓட்டிச் சென்ற மதுரையைச் சேர்ந்த அஸ்வினிகுமார் மற்றும் அவரது 6 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவருடைய மனைவி சிவபாக்கியம், மகள் திவானா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த தாய் மற்றும் மகள் இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், காவல் அதிகாரிகள்.

    அதிகாலையில் நடந்த இந்த விபத்து குறித்து, படாளம் காவல் துறை  விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த விபத்து புக்கத்துறை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தெரிஞ்சிக்கலாம் வாங்க; தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; ‘மீட்பராக’ இருப்பாரா உலகநாயகன்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....