Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு : 6 பேர் பரிதாபமாய் உயிரிழந்த சோகம்

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு : 6 பேர் பரிதாபமாய் உயிரிழந்த சோகம்

    ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஆண்கள் பள்ளியில் இரண்டு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. அதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்கு அருகில் உள்ள ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியில் உள்ள ரஹீம் ஷாகிட் பள்ளியில் தான் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை தாலிபான்கள் அகற்றியதில் இருந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் கணிசமாக குறைந்து இருந்தது. ஆனால், இஸ்லாமிக் மாநிலத்தில் பல்வேறு தாக்குதல்கள் நடந்திருந்தன. 

    இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பேசிய காபூல் போலீஸ் செய்தித்தொடர்பாளர் காலித் ஜட்ரான், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மிகவும் மேம்படுத்தப்பட்டவையாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். 

    அங்குள்ள ஆங்கில மொழி பயிற்றுமையத்தில் முன்றாவது குண்டுவெடிப்பு நடந்ததாக கூறிய அவர், அது வெடிபொருட்களால் தான் நடந்ததா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். 

    அந்த பகுதியில் ஹசாரா பிரிவினை சேர்ந்த மக்கள் அதிகம் வசித்து வருவதாகவும், அவர்களை சமீப காலங்களில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் குறிவைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    காலை வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகையில்தான் இந்த குண்டு வெடிப்பு கொடூரம் அரங்கேறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களைப் பார்க்கும் போது, சிதைந்த உடல்கள் பள்ளியின் வாசற்பகுதியிலேயே தான் காணப்படுகின்றன. அந்த பகுதியை தற்பொழுது தாலிபான் அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். இந்த கோரசம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    அந்நாட்டின் பள்ளியிலே தற்பொழுது குண்டுவெடிப்பு நடந்துள்ளது, அப்பகுதி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    weather

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள...