Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைஐஸ் ஏஜ் திரைப்பட வரிசையில் புது இணையத் தொடர் : மெய்சிலிர்க்க வைக்கும் ஸ்கிராட் அணில்...

    ஐஸ் ஏஜ் திரைப்பட வரிசையில் புது இணையத் தொடர் : மெய்சிலிர்க்க வைக்கும் ஸ்கிராட் அணில் காட்சிகள்

    ஐஸ் ஏஜ் படங்களை நமக்கு கொடுத்த, அனிமேஷன் துறையின் ஜாம்பவான்களான ப்ளூ ஸ்கை நிறுவனம் புது இணையத்தொடரை வெளியிட்டுள்ளது. ஐஸ் ஏஜ் படங்களில் ஒரு கதாபாத்திரமான ஸ்கிராட் என்ற அணிலுக்கு தான் இந்த பிரத்யேக இணைய தொடர் வெளியாகி உள்ளது. 

    90ஸ் கிட்ஸ்களுக்கும் சரி, 2கே கிட்ஸ்களுக்கும் சரி மிகவும் பிடித்த அனிமேஷன் திரைப்படங்களில் ஐஸ் ஏஜ் கண்டிப்பாக இருக்கும். ஐந்து முழுநீள படங்கள் மற்றும் சில சில குறும்படங்கள் என கடந்த 20  வருடங்களுக்கு மேலாக பல படங்கள் என இந்த ஐஸ் ஏஜ் வரிசையில் வெளியாகி உள்ளன. 

    ஐஸ் ஏஜ் திரைபடத்தொடரின் முதல் பாகம் 2002ல் தான் முதன் முதலாக வெளியானது. மேன்னி என்ற பெயர் கொண்ட மாமோத் யானை, சித் என்ற பெயர்கொண்ட ஸ்லாத் மற்றும் டியாகோ என்ற பெயர் கொண்ட பனிப்புலி ஆகியவை ஒன்றாக இணைந்து தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எப்படி சரி செய்கின்ற என்பதே இந்த ஐஸ் ஏஜ் திரைபடங்களின் உயிர்க்கதை ஆகும். 

    இதன் அடுத்தடுத்த பாகங்களில், எல்லி என்ற பெண் மாமோத் யானை, எட்டி மற்றும் க்ராஷ் என்ற பாசம் வகை எலிகள் மற்றும் பக் எனப்படும் காட்டுப்பூனை போன்ற கதாபாத்திரங்கள் வரிசையாக இணைந்தன. இவை செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும். அதுதான் ஐஸ் ஏஜ் படங்களை 20 வருடங்கள் தாண்டியும் இன்னும் வெற்றிப் பாதையில் வைத்துள்ளது. 

    ஆனால், இந்த எல்லா கதாபாத்திரங்களையும் விட அனைவருக்கும் மிகவும் பிடித்தது ஸ்கிராட் என்ற அணில்தான். இதுவரை வந்த அனைத்து ஐஸ் ஏஜ் படங்களையும் தொடங்கி வைப்பதே இந்த ஸ்கிராட் அணில்தான். தனது விருப்ப உணவான பருப்பை கைப்பற்ற இந்த ஸ்கிராட் அணில் செய்யும் சேட்டைகள் பூமிகள் இரண்டாக பிளக்கும் அளவுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி விடும். 

    முழுநீள படங்களில் இந்த ஸ்கிராட் அணிலுக்கு மட்டும் 10 முதல் 15 நிமிடங்கள் தனி இடமுண்டு. இப்படியாக வரலாற்று நிகழ்வுகளை ஸ்கிராட் அணிலுடன் இணைத்து, பூமியில் ஏற்பட்ட மாற்றங்களை கதையுடன் இணைத்து மாற்றியிருப்பர் ப்ளூ ஸ்கை நிறுவனத்தினர். 

    இப்பொழுது இந்த ஸ்கிராட் அணிலுக்காக மட்டும் பிரத்யேக இணைய தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் 4 நிமிடங்கள் என 5 பகுதிகளாக வெளியாகி இருக்கிறது இந்த குட்டி இணையத் தொடர். 

    இதன் மொத்த கால அளவே வெறும் 20 நிமிடங்கள் தான். இவ்வளவு சிறிய இணையத் தொடரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வெளியிட்டுள்ளது ப்ளூ ஸ்கை நிறுவனம். பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் கிளறப்பட்டு மெய்சிலிர்த்து போவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....