Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிரபலங்களை வலியுறுத்தும் பாஜக மறுக்கும் நடிகை!!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிரபலங்களை வலியுறுத்தும் பாஜக மறுக்கும் நடிகை!!

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. அதிமுக மற்றும் பாஜக பல காலமாக கூட்டணியில் இருந்த நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக தனித்து போட்டியிட இருப்பதால் கட்சி வளர்ச்சிக்காக பிரபலங்களை பெருமளவில் தேர்தலில் நிற்க வைக்க திட்டமிட்டுள்ளது.

    இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜகவினர் பலர் ஆர்வம் காட்டி இருந்தனர். பொதுவாக அதிமுக கூட்டணியில் இடம்பெறும் போது பாஜகவினர் பலருக்கு போட்டியிட இடம் கிடைக்காது. இதனால் கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாஜக நிர்வாகிகள் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் கடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் 8 மாவட்டங்களில் பாஜக கேட்ட இடங்கள் பெரிய அளவில் அதிமுக ஒதுக்கவில்லை.

    இதனால் கடந்த முறை பாஜக நிர்வாகிகள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை அதிமுக கூட்டணியில் இல்லை என்பதால் பாஜக நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்துள்ளனர். இதில் பலருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில்தான் பல மூத்த நிர்வாகிகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறக்க பாஜக தலைமை முயன்றதாக கூறப்படுகிறது.  ஆனால் பாஜக வில் உள்ள பல மூத்த நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அதிலும் குஷ்பூவும் ஒருவர்.

    தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்த பிரபலங்களை நிற்க வைக்க பாஜக தலைமை ஆர்வம் காட்டிய நிலையில்  பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குஷ்பூவை தொடர்பு கொண்டுள்ளார். சென்னையில்  கட்சி வளர உதவியாக இருக்கும் மற்றும்  தமிழகத்தில்  பாஜக வை வலுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் குஷ்பூ கொரோனாவை காரணம் காட்டி, தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டாராம். டெல்லி வரை தேசிய அளவில் பிரபலமாகிய நாம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதா என்று குஷ்பூ தயக்கம் காட்டுகிறார். இதேபோல் பல மூத்த நிர்வாகிகள், மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....