Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பா.ஜ.க-வின் முதல் எதிரி தி.மு.க தானா...? ; என்ன சொல்கிறார் அமித் ஷா?

    பா.ஜ.க-வின் முதல் எதிரி தி.மு.க தானா…? ; என்ன சொல்கிறார் அமித் ஷா?

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், தி.மு.க தான் நம் முதல் எதிரி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த வாரம் சென்னைக்கு வந்தார். அவர் ஆளுநர் மாளிகையில் தங்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக ஆவடியில் தங்கினார். பின்னர், என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு அமைப்பைச் சார்ந்த அதிகாரிகள், அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தனர்.

    தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இலங்கையில் கடுமையான பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால், அங்கிருந்து பலரும் தமிழகம் நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களும் வருவதற்கான அபாயம் உள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரிகள், அமித் ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பிறகு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடத்தினார் அமித் ஷா. தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம், ‘பா.ஜ.க-வுக்கு நம்பர் ஒன் எதிரி தி.மு.க. தான். ஆகையால், தமிழக அரசை எதிர்த்து, அவ்வப்போது தொடர் போராட்டங்களை அவசியம் நடத்த வேண்டும். இதற்காக, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பா.ஜ.க தலைமை செய்யத் தயாராக இருக்கிறது என அமித் ஷா தெரிவித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மதமாற்ற நிகழ்வு குறித்து, மிக தீவிரமாக ஆய்வுகள் செய்து அறிக்கை வழங்க வேண்டும் என அமித் ஷா கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. யூ டியூப் சமூக ஊடகவியலாளர்கள் 25 பேரை, அமித் ஷாவிடம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். அவர்கள் அனைவரும், பா.ஜ.க வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். மேலும், அமித் ஷா, ‘தமிழகத்தில் மௌவுனப்புரட்சி நடக்கிறது’ என தெரிவித்ததாக, தமிழகத்தில் உள்ள பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. வருகின்ற 2024 இல் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில், தமிழ்நாட்டில் குறைந்தது தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என தமிழக தலைவர்களிடம் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார் எனவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

    ட்ரெண்டிங் ஆகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மீம்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....