Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கிவரும் இந்தியா - உலக பணக்காரர் பில் கேட்ஸ் இந்தியாவுக்கு...

    குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கிவரும் இந்தியா – உலக பணக்காரர் பில் கேட்ஸ் இந்தியாவுக்கு புகழாரம் !

    அமெரிக்கா: வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகதில் இந்தியா-அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி ஒன்று நேற்று நடைபெற்றது. அதில், மலிவான விலையில் தடுப்பூசி வழங்கிவரும் இந்தியாவை குறித்து உலக பணக்காரரான பில் கேட்ஸ் இந்தியாவை பாராட்டியுள்ளார்.

    conference

    இது குறித்து அவர் கூறியது:-

    “கடந்த ஆண்டு மட்டும் இந்தியா 15 கோடி தடுப்பூசி மருந்துகளை கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி வளங்கி வருகிறது. குழந்தை பருவத்தில் மரணத்தை உண்டாக்கும் நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ்க்கு உலகெங்கிலும் உள்ள அரசாங்ககள் இலவச தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளன இதற்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன்.

    bill gates

    கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை. தற்போது இந்த சூழலில் இதைத் தாண்டி அவசர நடவடிக்கையாக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் உலகை அச்சுறுத்தும் நோய்களில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியதை நான் நினைவு கூர்கிறேன்.

    கோவெக்சின், கோர்பாவெக்ஸ் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் துறைகளையும், எல்லைகளையும் இணைக்கும் கூட்டாண்மையின் தயாரிப்புகள் ஆகும்.

    corona vaccine

    உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பின் தீவிரம் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் அடுத்த தொற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளன. இத்தகைய சூழலில் உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bombay jayashri

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய...