Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் : மீண்டும் சுனாமி வரும் வாய்ப்பு உள்ளதா?

    ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் : மீண்டும் சுனாமி வரும் வாய்ப்பு உள்ளதா?

    ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மீண்டும் சுனாமி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியான அதன் தலைநகர் டோக்கியோவிலிருந்து 297 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகுஷிமா நகர் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக டோக்கியோ நகரத்தில் உள்ள கட்டடங்களிலும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் கட்டங்களை விட்டுவிட்டு நகரத்தின் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. இந்த திடீர் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் காயமடைந்து உள்ளனர். 

    11 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இந்த பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு அணுமின்நிலையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. பாதிக்கப்பட்ட புகுஷிமா டெய்ச்சி அணிமின்நிலையத்தை இயக்கிவரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி ஹோல்டிங்சின் தொழிலாளர்கள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என சோதித்து வருவதாக அநிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இரவு 11.36 மணியளவில் கடலுக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களில் 3 அடிக்கும் மேலாக கடல் அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல்களைச் சேகரிக்கவும், எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என மதிப்பீடு செய்யவும் புகுஷிமாவுக்கு தெற்கே உள்ள இபராக்கி மாகாணத்தின் தைகுரி இராணுவ தளத்தில் இருந்து போர்விமானங்கள் கிளம்பி உள்ளதாக ஜப்பானின் வான் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. 

    இந்த கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 20 இலட்சம் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மியாகி அருகே ஷிரோஷி நோக்கி சென்று கொண்டிருந்த புல்லட் ரயில் தடம் புரண்டதால், அப்பகுதிகளில் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அரசு ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டு வருவதாகவும் மீட்பு பணிகளுக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தங்களால் முடிந்த அளவு செய்கிறோம் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய ட்விட்டரில் தயவுசெய்து முதலில் அனைவரும் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....