Friday, March 31, 2023
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துக்கொள்ளுங்கள்! பயன்பெறுங்கள்!

    ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துக்கொள்ளுங்கள்! பயன்பெறுங்கள்!

    ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த ஆரஞ்சு பழம் கிழக்கு ஆசிய நாடுகளில் முதன்முதலில் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்தும் வைட்டமின் சி சத்துகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. சரி வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம் ஆரஞ்சில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பதை… 

    • ஆரஞ்சு சாப்பிடுவது நமது உடல் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. மேலும் புதிய செல்கள் உருவாகுவதை ஊக்குவிக்கிறது. 
    • ஆரஞ்சில் இரும்பு சத்து இருப்பதால், இரத்த சோகை நோய்க்கு எதிராக போராடுகிறது. 
    • வைட்டமின் ஏ ஆரஞ்சில் இருப்பதால், கண் சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. 
    • புற்றுநோயை உருவாக்கும் தீவிரமான செல்களை ஆரஞ்சு எதிர்க்கிறது. 
    • இப்பழம் சாப்பிடுவது மனநிலையை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தினை வெகுவாக குறைக்கிறது. 
    • ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் தெரியாத கிருமிகள் உடலுக்குள் நுழையும் பொது அவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. 
    • இதில் இருக்கும் புரதச்சத்து நமது உடலின் செல்களுக்கு சக்தியை கொடுக்கிறது. மேலும் தோள்களை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மேனிக்கு நல்ல பொலிவையும் தரக்கூடியது. 
    • இதில் கொழுப்பு சத்தின் அளவு குறைவு என்பதால், இதயத்திற்கு மிகவும் நல்லது. 
    • ஆரஞ்சில் சுண்ணாம்புச்சத்து இருப்பதால் எலும்புகளுக்கு நல்ல பலத்தை அளிக்கிறது.  
    • முக்கியமாக இதில் வைட்டமின் பி இருப்பதால், எந்தவித பாதிப்பும் இன்றி கரு வளர்ச்சி அடைய உதவுகிறது. இதனால், ஆரஞ்சு பழத்தை கர்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. 
    • ஆரஞ்சில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் பாதுகாக்கிறது. 
    • இயற்கையாகவே ஆரஞ்சு பழத்தில் சர்க்கரை இருப்பதால், இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றிற்கு மிகவும் நல்லது. மேலும், இது நமது உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. 

    இனி ஆரஞ்சு பழத்தை விட மாட்டீங்களே… 

    இதையும் படிங்க, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்களையும் காய்களையும் உண்டுப் பாருங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...