Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களால் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபங்கள்!!!

    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களால் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபங்கள்!!!

    நிறுவனத்தில் இருந்து நேரடியாக வேலை பார்ப்பது, வீட்டிலிருந்து வேலை பார்ப்பது குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில், நிறுவனத்தில் இருந்து வேலை பார்ப்பதை விட வீட்டிலிருந்து வேலை பார்ப்பது அதிக லாபம் இருப்பதாக கூறுகின்றனர்.

    work form home

    கொரோனா நோய் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக முழுவதும் மக்களை வாட்டி வதைகிறது. இதனால், இந்தியா முழுவதும் தனியார் நிறுவனங்களில் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் (Remote work and hybrid work) பெரிதளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

    இன்டீட் நிறுவனம் நடத்திவந்த ஆய்வில் கொரோனா தொற்றுக்குப் பின்பு 60% ஊழியர்கள் ரிமோட் வொர்க் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை ஆதரிக்கின்றனர். 42% ஊழியர்கள் ஹைப்ரிட் மாடல் அதாவது பாதி நாள் வீட்டில், பாதி நாள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற விரும்புகின்றனர் என கூறுகிறனர்.

    இன்டீட் நிறுவனம் இந்த ஆய்வை பெரும்பாலான நிறுவனங்களையும் ஆய்வு செய்துள்ளது. இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் இது தற்போது நடைமுறையில் உள்ளது. ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் வேலைகள் அதிகரித்துள்ளது என்று ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

    Remote work

    வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால், வேலை செய்யும் நிறுவனத்திற்கு தெரியாமல் பிற நிறுவனங்களில் பகுதி நேர ஊழியராக கூட பணியாற்றி கூடுதலான வருமானத்தைப் பெற்று வருகின்றனர்.

    58% ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றிய செலவுகளையும் இண்டர்நெட், ஸ்டேஷ்னரி போன்ற தேவையான பொருட்கள் நிறுவனங்கள் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், போக்குவரத்துச் செலவுகள், வெளியில் சாப்பிடும் உணவுக்கான செலவுகளும் குறைந்துள்ளது. அதுமட்டும்மல்லாமல், பலர் தங்களது சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் காரணத்தால் வாடகை பிரச்சனை இல்லை.

    hybrid-work

    ஊழியர்களை தவிர நிறுவனங்களுக்கும் அதிக அளவு லாபம் உள்ளது. எப்படியென்றால், ஒருபக்கம் ஊழியர்களுக்கு அதிக வேலைச் சுமை கொடுத்து அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வரும் நிறுவனங்கள், அலுவலக வாடகை முதல், அலுவலகத்தில் இருக்கும் பல செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், இண்டர்நெட், மின்சாரம் என அனைத்தும் குறைக்கிறது. இது, நிறுவனங்களுக்கு பெரிய லாபத்தை அளிக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....