Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்துளசி இலைகளின் பயன்கள் தெரியுமா? இதை படியுங்கள்; இப்படி செய்து பாருங்கள்!

    துளசி இலைகளின் பயன்கள் தெரியுமா? இதை படியுங்கள்; இப்படி செய்து பாருங்கள்!

    சளி, இருமல் இருந்தால் முன்பெல்லாம் வீட்டு வைத்தியமும், பாட்டி குறிப்பும் கை கொடுக்கும். இன்று டாக்டரிடம் ஓடுகிறோம். வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். பாரம்பரியமாக நமது பாட்டிமார்கள் சொன்ன உணவுப் பழக்கத்துக்கு நாம் மாறவேண்டும்.

    இந்திய மருத்துவத்துறையானது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. நம் மருத்துவ முறை 2000 ஆண்டுகள் தொன்மையானது.

    வெளிநாட்டு குப்பை உணவை தவிர்த்தால், தொப்பையில்லாத வாழ்க்கை வாழலாம். பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சித்த மருத்துவம் பாரம்பரிய முறைப்படி வாழவே பரிந்துரைக்கிறது.

    வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். அது காலத்தால் அழிக்க முடியாத பொக்கி‌ஷம். சித்த மருத்துவம் நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். நோய்களுக்கு நல்ல பலனும் அளிக்கும். இவற்றின் பயன்களை முழுவதுமாக அறிந்தவர்கள் நம் பாட்டிமார்கள் தான்.

    பாட்டி வைத்தியத்தில் பயன் படுத்தப்படும்:

    துளசி இலைகளை நிழலில் உலர்த்தி மாவாக்கி மூக்கில் நுகர ஆஸ்மா சைனஸ் தொல்லை தீரும்.

    துளசி இலை அவித்த நீரில் தேன் கலந்து குடிக்க காய்ச்சல் குறையும்.

    துளசிச் சாறும் , தேனும் இருமலை நிறுத்திச் சளியை குறைக்கும்.

    துளசியிலைச் சாற்றைக் தலையில் தடவி ஊறவைத்து அலச பொடுகு, பேன் குறையும்.

    துளசிச் சாற்றில் இளநீர் கலந்து பருக அலர்ஜி சரியாகும். தோல் நோய்களுக்குத் துளசி நல்ல மருந்து.

    துளசி இலையைத் தலையணை மேல் பரப்பிப் படுத்தாலும் பேன் போகும்.

    துளசியை வாயில் போட்டு மென்று விழுங்க தொண்டைக் கரகரப்பு, வாய் நாற்றம் நீங்கும். கரும்துளசி சாப்பிட கபம் கட்டுப்படும்.

    4 கரண்டி துளசிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட இரத்த விருத்தி உண்டாகும்.

    திப்பிலி, தேன், துளசிச்சாறு சேர்த்துச் சாப்பிட எலி, நாய்க்கடி விஷம் குறையும்.

    துளசியை குடிக்கும் நீர்ப்பாத்திரத்தில் போட்டுக் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். துளசிச் சாற்றில் சந்தனம் கலந்து பூச முகப்பரு போகும்.

    கீரை விவசாயத்தில், குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும்!

    காயங்களை விரைவாக ஆற்றி விடும் மின் பிளாஸ்திரி கண்டுபிடிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....