Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பீஸ்ட், கேஜிஎஃப் மோதல்; கள நிலவரங்கள் என்ன? எப்படத்திற்கு பலம் அதிகம்?

    பீஸ்ட், கேஜிஎஃப் மோதல்; கள நிலவரங்கள் என்ன? எப்படத்திற்கு பலம் அதிகம்?

    பீஸ்ட்

    பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால், விஐய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலக ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தளபதி விஜய், இயக்குநர் செல்வராகவன், பூஜா ஹெக்தே ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது உச்சத்தில் இருக்கிறது.

    விஜய் திரைப்படம் என்பதாலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததாலும், இயல்பாகவே பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மக்களிடத்தில் நிலவி வந்தது.  

    இந்நிலையில், திரைப்படம் தொடங்கி, பீஸ்ட் திரைப்படம் சார்ந்து வெளிவந்த சிறு செய்திகள் முதல் வெளிவந்த அப்டேட்டுகள் வரையில் அனைத்துமே பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிப்பதாகவே இருந்துவந்தது.

    குறிப்பாக, திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மக்களால் வரவேற்கப்பட்டது. இப்படியாக பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகள் கூடி கூடி, தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 

    இப்படியான  பெரும் எதிர்ப்பார்ப்புகளை, பீஸ்ட் பூர்த்தி செய்யுமா என்பது நாளைதான் தெரியவரும். முன்பதிவுகளில் பீஸ்ட் திரைப்படமானது பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    கேஜிஎஃப் 

    மற்றொரு புறம், வருகிற 14 ஆம் தேதி கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகிறது. கேஜிஎஃப் முதல் பாகம் இந்தியா முழுவதும் ஹிட் அடித்ததை எவராலும் மறுக்க முடியாது. ‘ராக்கி பாய்’ என்ற பெயர் இந்தியா முழுவதும் தற்போது பரீட்சியம். யாஷ் அவர்கள் ராக்கியாக முழுவதுமாய் பொருந்தியிருப்பார். 

    கேஜிஎஃப் முதல் பாகம் வெளிவந்த சமயத்திலேயே, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் தொற்றிக்கொண்டது. தமிழகத்திலும், கேஜிஎஃப் திரைப்படத்திற்கு உள்ள எதிர்ப்பார்ப்பு என்பது அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

    ஒரு பிறமொழி திரைப்படத்திற்கு, குறிப்பாக கன்னடத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படத்திற்கு தமிழகத்தில் இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இதுவே முதல்முறை. 

    பீஸ்ட் & கேஜிஎஃப் 

    உண்மையை கூற வேண்டும் என்றால், வியாபரத்தை பொறுத்தமட்டில், பீஸ்ட் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பிற இடங்களில் எல்லாம் கேஜிஎஃப் திரைப்படம்தான் முன்னிலையில் இருக்கிறது. 

    பீஸ்ட் திரைப்படத்திற்கு புரோமஷன்கள் பெரிதும் செய்யப்படாதது முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. பீஸ்ட் தன்னை பான்- இந்தியா திரைப்படமாக முன்னிறுத்திக்கொள்ள முனையவே இல்லை. கேஜிஎஃப் ஏற்கனவே பான்-இந்தியா திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளது. 

    எது எப்படியாக இருந்தாலும் பீஸ்ட்டிற்கும், கேஜிஎஃப்பிற்கும் இருக்கும் போட்டியென்பது மிகவும் இயல்பானது. நாளை பீஸ்ட் வெளியாவதால், பல திரையரங்குகள் பீஸ்ட் திரைப்படத்தைதான் ஒளிபரப்புகின்றன. ஒருவேளை பீஸ்ட் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில், 14 ஆம் தேதி வெளியாகும் கேஜிஎஃப், பீஸ்ட் ஒளிபரப்பை குறைத்துவிடும் . 

    ஆனால், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை பொறுத்தவரையில், கேஜிஎஃப் முதல் பாகத்தை பார்த்த அனைவரும், கதையின் முடிவை அறிந்துக்கொள்வதற்காகவே, அவற்றை திரையரங்குகளில் காண்பதற்காகவே காத்திருக்கும் பெருங்கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கிறது. 

    இரு திரைப்படங்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில், இரு திரைப்படங்களும் பல நாட்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி பெரும் லாபத்தை திரைத்துறைக்கு ஈட்டுத்தரும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....