Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா, ஜாலியாக செய்யும் சாதனை; ரசிகர்கள் மகிழ்ச்சி!

    தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா, ஜாலியாக செய்யும் சாதனை; ரசிகர்கள் மகிழ்ச்சி!

    விஜய் அவர்களின் திரை வாழ்வை உற்று நோக்கினால் பாடலுக்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு என்பது தனி என்றே புலப்படும். ஆம்! விஜய் அவர்களின் ஆரம்பக்கட்டத்தில் இருந்து தற்போது வரை விஜய் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களில் பாடல் என்பது சூப்பர் ஹிட்! ஒரு படம் இரு படமல்ல பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் என்ற தகுதியில்தான் உள்ளன. 

    விஜய் நடித்து மக்களுக்கு ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன திரைப்படங்களில் கூட பாடல்கள் பிடித்துவிடும் மாயம் நிறையவே விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் நடந்திருக்கிறது. அது எப்படி, இவரின் திரைப்படங்களின் பாடல்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வியெல்லாம் பலமுறை எழுந்திருக்கிறது.

    பாடல் என்பது இசையமைப்பாளர், பாடாலாசிரியர், இயக்குனர் ஆகியோரை சார்ந்தே அதிகம் இருக்கும். விஜய் அவர்களுக்கும் பாடல் உருவாவதற்கும் அதிக அளவிலான சமந்தம் இல்லை என்றாலும், தளபதி விஜய் அவர்களின் தொடர் பட பாடல்களின் வெற்றி, பாடல் உருவாக்கத்தில் தளபதி விஜயின் இடையூறு அதிகம் இருக்கிறதோ என்ற கேள்வியை கேட்க வைத்து விடுகிறது. 

    இந்நிலையில், இப்படியான கேள்வி தற்போதும் தொடர்ந்துதான் வருகிறது. சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது ஆபாரமாக இருந்து வருகிறது. அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் எழுத வெளிவந்தது. பாடல் வரிகள் புரியவில்லை என்ற கருத்துகள் இருந்த போதும் கூட அரபிக்குத்து பாடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு வியப்புக்குரிய ஒன்றே.

    இதுவரையில், இருபது கோடிக்கு அதிகமான பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரபிக்குத்து பாடலுக்கு போட்டித்தரும் வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளியான இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் இடம்பெற்றுள்ளது.

    தளபதி விஜய் அவர்களின் குரலில் உத்வேகத்தை  ஜாலியாக தந்துக்கொண்டிருக்கும் பாடல்தான், ஜாலியோ ஜிம்கானா. பாடல் வெளியானதில் இருந்து இணையத்தில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இப்பாடல். 

    பாடல் வெளியான பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே பத்து இலட்சம் பார்வைகளை கடந்தும், இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பார்வைகளை கடந்து இணையத்தை ஜாலியோ ஜாலியாக கலக்கி வருகிறது, ஜாலியோ ஜிம்கானா. இன்னமும் சாதனைகள் பலவற்றை இப்பாடல் படைக்க தளபதி ரசிகர்கள் ஜாலியோ ஜிம்கானாவாக இருப்பர் என்பதில் மாற்று கருத்து இல்லை.

    இதையும் படிங்க; தளபதி விஜயின் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடிய பிரபலங்களும் காணொளிகளும்; அடுத்த சிங்கள் பாடலுக்கு ஆட ரெடியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....