Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துப்பாக்கியின் அப்டேட் வெர்ஷனா பீஸ்ட்? ; பீஸ்ட்டில் விஜய்யின் பெயர் இதுதானா?- தகவல்கள் உள்ளே!

    துப்பாக்கியின் அப்டேட் வெர்ஷனா பீஸ்ட்? ; பீஸ்ட்டில் விஜய்யின் பெயர் இதுதானா?- தகவல்கள் உள்ளே!

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இம்மாதம் 13 ஆம் தேதி வெளிவர உள்ள திரைப்படம்தான், பீஸ்ட். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் குறித்து பல விடயங்களும் ஒவ்வொன்றாய் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. துப்பாக்கி திரைப்படத்தோடு பீஸ்ட் திரைப்படத்தை கோர்க்கும் செய்தி குறித்து இங்கு காண்போம். 

    அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்பு 

    வெளிவருகிற ஒவ்வொன்றும் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணமே உள்ளன. பாடல்களாகட்டும், வெளிவந்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களாகட்டும், அறிவிப்புகளாகட்டும் அனைத்துமே பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்துவதாகவே உள்ளது. 

    பீஸ்ட் திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பை சமூக வலைத்தளங்களிலும், நாம் பணிபுரியும் இடங்களிலும், பயணப்படும் இடங்களிலும் எளிதாக காணலாம்.

    இத்திரைப்படத்தில் விஜய் அவர்களின் தோற்றமானது பலரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாக பீஸ்ட் திரைப்படத்தின் அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பீஸ்ட் திரைப்படம் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. 

    விஜய் கதாப்பாத்திரம் 

    பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் ரா ஏஜெண்ட் (raw agent) ஆக நடித்துள்ளார். இதற்கு முன்பாக துப்பாக்கி மற்றும் வில்லு போன்ற திரைப்படங்களில் இராணுவ அதிகாரியாக விஜய் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள் சில துப்பாக்கி திரைப்படத்தில் இருக்கும் விஜய் சாயலை நினைவூட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும், பீஸ்ட் திரைப்படத்திலும் விஜய் அவர்கள் ஏறத்தாழ ராணுவ அதிகாரிக் கதாப்பாத்திரத்தில்  இருப்பதால் துப்பாக்கி திரைப்படத்தின் சாயலை பீஸ்ட் திரைப்படத்தில் எதிர்ப்பார்க்கலாமா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

    பீஸ்ட் திரைப்படத்தில் உள்ள  தளபதி விஜய் அவர்களின் காதாப்பாத்திரம், துப்பாக்கி விஜய் கதாப்பாத்திரத்தின் அப்டேட் வெர்ஷனாக இருக்குமா என்ற கேள்வியை பலர் முன்வைத்துள்ளனர்.

    சமீபத்தில், நெல்சன் திலீப்குமார் அவர்கள், ஒரு நெருக்கடியான சூழல், அந்தச் சூழலை நாயகன் எப்படிக் கையாளுகிறார், அந்தச் சூழலினால் ஆபத்தில் சிக்கியவர்களை எப்படி நாயகன் காப்பாத்துகிறார் என்பதுதான் கதை என்று கூறினார். 

    துப்பாக்கி திரைப்படத்திலும் ஒரு இக்கட்டான சூழலில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில்தான் விஜய் இருப்பார். ஆனால் துப்பாக்கியில் காப்பாற்றும் நிகழ்வானது மறைமுகமாக நிகழும். 

    ஏற்கனவே துப்பாக்கியைப் போன்றதாகத்தான் பீஸ்ட் திரைப்படமும் இருக்குமா என்ற கேள்விகள் எழும்பிக்கொண்டிருக்க, தற்போது நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் கதைப்பற்றி கூறியிருப்பது இக்கேள்வியை இன்னும் பலரிடத்தில் எழுப்பியுள்ளது. 

    படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பீஸ்ட் திரைப்படம் துப்பாக்கியின் அடுத்த வெர்ஷனா என்பதை முடிவு செயதுக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் இணையத்தில் தெரிவத்து வருகின்றனர். 

    நாளை பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வீர ராகவன் 

    தற்போது, மிக முக்கிய ஒன்றாக இணையத்தில் பீஸ்ட் குறித்து ட்ரெண்ட் ஆகியிருப்பது என்னவெனில், பீஸ்ட் திரைப்படத்தில் உள்ள தளபதி விஜய் அவர்களின் பெயர்தான். ஆம்! வீர ராகவன் என்ற பெயரினை உடைய கதாப்பாத்திரத்தில்தான் விஐய் அவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். இதனால் வீர ராகவன் என்ற பெயரும் ஹேஷ்டெக்குகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....