Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பீஸ்ட் திரைப்படக்குழுவால் ஆனந்தத்தில் விஜய் இரசிகர்கள்; பிப்ரவரி 14 ட்ரீட்!

    பீஸ்ட் திரைப்படக்குழுவால் ஆனந்தத்தில் விஜய் இரசிகர்கள்; பிப்ரவரி 14 ட்ரீட்!

    பெரிய ரசிக பட்டாளத்தை தன்னுடன் வைத்திருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் அவர்களின் இசையில், சன்  பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தான், பீஸ்ட்! பீஸ்ட் திரைப்படம் பற்றி தெரியாத நபர்களே இல்லை எனலாம் அந்த அளவுக்கு பீஸ்ட் திரைப்படம் பற்றியான சிறு விடயங்களும் மக்களை சென்று அடைந்து விடுகின்றன.

    இப்படியான நிலையில்தான், பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அப்போஸ்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பின்பு பீஸ்ட் திரைப்படம் சார்ந்து அப்டேட்டுகள் வருமா என்று பலரும் எதிர் நோக்கி இருந்த நிலையில்தான், பீஸ்ட் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட பின்பும் திரைப்படம் சார்ந்து பெரிய அப்டேட்டுகள் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில், இன்று யாரும் எதிர்பாரா விதமாக மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் திரைப்படம் சார்ந்து அறிவிப்பு ஒன்று வருகிறது என படக்குழு அறிவித்தது. படக்குழு இச்செய்தியை அறிவித்த பின் இணையம் முழுவதும் தளபதி விஜய், பீஸ்ட் போன்ற ஹேஷ்டேக்குகளால் கவரப்பட்டிருந்தது. 

    அவர்களின் ரசிகர்கள் மாலை வரும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என யோசித்தபடியும், தங்களுக்கு தோன்றிய யூகங்களை பகிர்ந்த படியும் இருந்தனர். இந்த யூகங்களின் கணிப்பில் பலர் வெற்றியும் பெற்றனர்.

    vijay

    ஆம்! பல ரசிகர்களும் முன்பே கணித்தபடி, பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்புதான் வெளிவந்துள்ளது. எதிர்பார்த்தபடி, அனிரூத் அவர்கள் இசையமைக்க , சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். வழக்கம்போல் நெல்சன் திலீப்குமார் அவர்களின் புரோமோ கலகல என இருக்க, அவற்றுள் சிவகார்த்திகேயன் இருக்க, தளபதி விஜய் அவர்களின் குரலும் பங்குபெற புரோமோ தாறுமாறாய் விஜய் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக, விஜய் அவர்கள் புரோமோவில் பேசியிருப்பது பலருக்கும் குதூகலத்தை தந்துள்ளது.

    Arabic Kuthu – Beast First Single Promo | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh – YouTube

    வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியாக உள்ளது. இதன் மூலம் விஜய் ரசிகர்களுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ட்ரீட் இருப்பது உறுதி!

    இனி அவ்வப்போது பீஸ்ட் திரைப்படம் சார்ந்து அறிவிப்புகள் வரும் என்பதால், பீஸ்ட் திருவிழா தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....