Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சாக்லெட் மூலம் பாக்டீரியா பரவுகிறதா? எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு!

    சாக்லெட் மூலம் பாக்டீரியா பரவுகிறதா? எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு!

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான தின்பண்டம் தான் சாக்லெட். அதிலும், குழந்தைகள் அடம்பிடித்தாவது, சாக்லெட்டை வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். சாக்லெட்டில் உள்ள இனிப்புச் சுவை தான் இதற்கெல்லாம் காரணம். ஆனால், சமீபத்தில் வெளியான சாக்லெட் பற்றிய ஆய்வு முடிவுகள், அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    ஏறக்குறைய 150-க்கும் மேற்பட்டோருக்கு, அவர்களின் வயிற்றுப் பகுதியில், தொற்றினை ஏற்படுத்தக் கூடிய சால்மோனெல்லா வகை பாக்டீரியா, பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதிலும், மோனோபாசிக் சால்மோனெல்லா தைபிமுரியம் பாக்டீரியாவின் 34-வது உருமாறிய தொற்று பரவி வருகிறது என்றும், உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் பரவி வருகிறது என்ற, காரணத்தை அறிந்து கொள்ள ஆராய்ச்சி நடத்திய போது, உலகின் பிரசித்தி பெற்ற பெல்ஜியம் சாக்லெட் தான் இதற்கு காரணகர்த்தாவாக இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது . பெல்ஜியம் நாட்டிலிருந்து, பெல்ஜியம் சாக்லெட் கிட்டத்தட்ட 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சால்மோனெல்லா வகைப் பாக்டீரியா பாதிப்பு குறிப்பாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் அதிகளவு பரவுகிறது. தற்போது 9 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிர்ச்சேதம் இதுவரை ஏதுமில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட பெல்ஜியம் சாக்லெட்டுகள் திரும்பப் பெறப்படும் வரை, தொற்றுப் பரவல் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    பெல்ஜியம் நாட்டில் உள்ள அர்லோன் நகரில், சாக்லெட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, மோர் கலக்கும் பெரியத் தொட்டியில், சால்மோனெல்லா வகைப் பாக்டீரியா இருப்பதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிகழ்ந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. இதனிடையே, தற்போது மனிதர்களிடையே கண்டறியப்பட்ட பாக்டீரியா, சாக்லேட் தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவுடன் மிகச்சரியாக ஒத்துப் போகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இனி குழந்தைகள் உணவு முறையில், பெற்றோர்களின் விழிப்புணர்வு மட்டுமே, குழந்தைகளின் நலன் காக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    இதையும் படிங்க; இயக்குனர் செல்வராகவன் எழுதிய பாடலா இது? இப்படி அசத்தியிருக்கிறாரே…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....