Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல் மேயரை தேர்ந்தெடுக்கும் ஆவடி மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன??

    முதல் மேயரை தேர்ந்தெடுக்கும் ஆவடி மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன??

     

     தமிழகத்திதின் 15-வது  மாநகராட்சியாக ஆவடியை சமீபத்தில் தான் அறிவிக்க பட்டன. தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் மேயரை தேர்ந்தெடுக்கவிருக்கும் ஆவடி மாநகராட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை பற்றி பார்ப்போம். 48 வார்டுகளைக் கொண்ட ஆவடி மாநகராட்சியில் மொத்தமாக 3,12,489 வாக்காளர்கள் உள்ளனர்.

    avadi

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை கட்டுமானப் பணி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல கழிவு நீர் கால்வாய் திட்டம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    roads

    குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு ஆவடி தொகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். குண்டு குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைத்தல், மற்றும் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் புதியதாக வரும் மேயரிடம் எதிர்பார்க்கின்றனர். சாலையோரம் பல திட்டங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல் மேடும் பள்ளமுமாக பாதி சாலைக்கு மேல் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் அங்கே வாகன நெரிசல்கள் உண்டாகின்றன. அடிக்கடி ஏற்படுகின்ற மின்சார துண்டிப்பை சரி செய்து முறையான மின்சாரம் வழங்கிட வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.  திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டிருந்தாலும்,எதுவும் முறையான செயல்பாட்டிற்கு வரவில்லை என்று பொது மக்களிடையே அதிருப்தி இருந்து வருகின்றது. 

    drainage

    மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதால், குப்பைகளை சீராக அப்புறப்படுத்த வேண்டும். மற்றும் சாலையோரங்களில் இருக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட  தூய்மை பணியாளர்களை தேவையான இடங்களில் அமர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மக்கள் முன்னிறுத்துகின்றனர். 

    avadi

    ஆவடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வர வேண்டும் என்பது மக்கள் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும் மற்றும்  பூங்காக்களில் வண்டி வாகனங்களை நிறுத்திட தேவையான இடங்களை ஒதுக்கி முறையான பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....