Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்சூரியமின்சாரத்தில் ஓடப்போகும் டெஸ்லா கார்; ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

    சூரியமின்சாரத்தில் ஓடப்போகும் டெஸ்லா கார்; ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு 15,100 கிலோமீட்டர் தூரத்திற்கு, அச்சிடப்பட்ட சோலார் பேனல்களைப் பொருத்தி டெஸ்லா கார்களை இயக்கி சோதனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இந்த சோதனை ஓட்டம், சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற உள்ளது. 

    இந்த சார்ஜ் அரவுண்ட் ஆஸ்திரேலியா திட்டத்தில், டெஸ்லா காரில் 18 அச்சிடப்பட்ட சோலார் பேனல்கள் பொருத்தப்படும். அவை ஒவ்வொன்றும் 18 மீட்டர் நீளமுடையவை. அவை, காரில் பொருத்தப்பட்டு பேட்டரிக்கு மின்சாரம் தேவைப்படும்பொழுது சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை பிரித்து கொடுக்கும். 

    இந்த அச்சிடப்பட்ட சோலார் பேனல்களை கண்டுபிடித்த பால் தஸ்தூர், நியூகேஸ்டில் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த குழுவினர் இந்த சோலார் பேனல்கள் மூலம் காரை இயக்குவது மட்டுமல்லாமல், மற்ற பயன்பாட்டுகளுக்கு பயன்படுத்த முடியுமா? என்ற சோதனை தற்போது நிகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

    இது நிச்சயமாக தொலைதூரங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் சக்தியூட்டுவது போன்ற தகவல்களை நாங்கள் பெறுவதற்கு எங்களுக்கு சிறந்த சோதனை ஓட்டமாக அமையும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, விண்வெளியில் பயன்படுத்துவது தொடர்பாக சிந்திக்க முடியும் என்று கூறியுள்ளார். 

    இந்த அச்சிடப்பட்ட சோலார் பேனல்கள் மிகவும் எடைகுறைந்த, லேமினேட் செய்யப்பட்ட பிஇடி பிளாஸ்டிக் ஆகிவற்றால் செய்யப்பட்டது ஆகும். இவற்றை தயாரிக்க ஒரு சதுர அளவிற்கு 10 டாலர் மட்டுமே செலவாக அமையும். இந்த தயாரிப்பு மூலம் ஆஸ்திரேலிய மக்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் முக்கியத்துவம் புரியும். மேலும், அது எலக்ட்ரிக் கார்களின் உச்ச வரம்பு மீதான கவலையை போக்கும் என்று பால் தஸ்தூர் தெரிவித்துள்ளார். இந்த சோலார் பேனல்கள் ஒயின் லேபிள்களை அச்சிட பயன்படுத்தப்படும் அச்சுப்பொறி மூலம் அச்சிடப் படுகின்றன. 

    இந்த இயற்கை நலன் சார்ந்த சோதனை ஓட்டத்தில், ஆராச்சியாளர்கள் குழு 70 பள்ளிகளுக்கு சென்று எதிர்கால அறிவியல் பற்றி மாணவர்களுக்கு விளக்குவதற்கு திட்டமிட்டுள்ளன.

    இதையும் படியுங்கள், ஆடி நிறுவனத்தின் அட்டகாசமான எலக்ட்ரிக் கார்; எலக்ட்ரிக் கார்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்குமா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....