Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்காட்டுத்தீயினால் ஓசோனில் ஓட்டை : விஞ்ஞானிகள் விளக்கம்

    காட்டுத்தீயினால் ஓசோனில் ஓட்டை : விஞ்ஞானிகள் விளக்கம்

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ விபத்தில் வெளியான புகையினால் ஓசோனில் ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

    கடந்த 2019-2020 வருடங்களில் ஆஸ்திரேலிய காட்டுப்பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ பரவி உலகளாவிய பிரச்சினை ஆனது. அப்பொழுது எழுந்த வானைத்தொடும் புகைமண்டலத்தால் ஓசோனில் ஓட்டை விழுந்துள்ளதாக விர்ஜினியா விஞ்ஞானி கூறியுள்ளார். 

    நோர்பாக்கில் உள்ள ஓல்ட் டொமினியன் பல்கலைக்கழகத்தின் வேதியியலாளரான பீட்டர் பெர்னார்த் தன்னுடைய குழுவுடன் வளிமண்டல வேதியியல் பரிசோதனை செய்யும் செயற்கைகோள் கருவியின் மூலம் கீழ் அடுக்கு மண்டலத்தில் உள்ள சேகரிக்கப்பட்டத் தரவுகளை ஆய்வு செய்தார். அது வளிமண்டலத்தில் உள்ள வெவ்வேறு துகள்கள், வெவ்வேறு அலைநீளங்கள் உள்ள ஒளியை எவ்வாறு உறிஞ்சுகின்றன என்பதை அளவிடும் கருவி ஆகும். இதன்மூலம் அந்த துகள்களில் என்னென்ன மூலக்கூறுகள் உள்ளன என்பதை அறியலாம். பைரோகுலோனிம்பஸ் எனப்படும் தீ எரிபொருளுடன் கூடிய இடியுடன் பெய்யக்கூடிய மழையினால் பல்வேறு கரிம மூலக்கூறுகள் அதில் உள்ளன என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு அதில் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களின் சமநிலையை மாற்றியமைக்கும் வகையில் இந்த இரசாயன மாற்றங்கள் நடந்துள்ளன. இதனால், அதிகரித்த குளோரின் மூலக்கூறுகள் ஓசோனைத் தின்று விட்டன. அடுக்கு மண்டலத்தில் 2020 ஜனவரி வரை ஓசோன் அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இந்த ரசாயன மாற்றம் மற்றும் காட்டுத்தீயினால் 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓசோனின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இது 2005 முதல் 2019 உள்ளவரை ஓசோன் செறிவைக் காட்டிலும் மிகவும் குறைவு ஆகும். 

    பூமியின் ஓசோன் அடுக்கு சூரியனிலிருந்து நேரடியாக வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி பூமியைப் பாதுகாக்கிறது. ஆனால், குளோரோ புளோரோ கார்பன் மற்றும் பல காரணிகளால் பூமியின் ஓசோன் அடுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காட்டுத்தீ போன்ற இடர்களால் ஓசோனின் நிலை மேலும் கேள்விக்குறி ஆகியுள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....