Monday, March 18, 2024
மேலும்
    Homeவாகனம்ஆடி நிறுவனத்தின் அட்டகாசமான எலக்ட்ரிக் கார்; எலக்ட்ரிக் கார்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்குமா ?

    ஆடி நிறுவனத்தின் அட்டகாசமான எலக்ட்ரிக் கார்; எலக்ட்ரிக் கார்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்குமா ?

    உலகின் முன்னணி நிலையில் இருக்கும், வேகமான, சிறந்த மற்றும் அட்டகாசமான கார்களை உருவாகும் நிறுவனங்களுக்கு, அதே மாதிரியான கார்களை எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் உருவாக்குவது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ஆனால், எலக்ட்ரிக் தொழ்ல்நுட்பம் இப்பொழுதே தொடங்கி விட்டது. எனவே, முன்னணி உற்பத்தியாளர்கள் பழைய தொழில்நுட்பங்களில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. 

    இதன் காரணமாகவே ஈவி டெக்னாலஜி மற்றும் பிளாக்ஷிப் கார்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. பெரிய பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கார்களில் உள்ள சிறப்பம்சங்கள், தற்பொழுது உள்ள எலக்ட்ரிக் கார்களில் மிக எளிதாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன. இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

    எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை அவற்றின் வேகத்தில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆடி நிறுவனத்தின் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி அந்த வேகத்தை எட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 100கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டும் திறன் படைத்தது இந்த கார். இவ்வளவு வேகத்தில் பயணிக்கும் போது காரின் பேட்டரி திறனில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

    இதே வேகத்தை உள் எரிப்பு திறன் கொண்ட இயந்திரங்களில் முயற்சி செய்யும் போது, வேகத்தில் மாற்றத்தையும், கிளட்ச் பிளேட்டுகள் மாற்றுவதில் தாமத்தையும் உணர முடியும். ஆனால், இந்த எலக்ட்ரிக் கார்களில் இதுசார்ந்த சிக்கலையும் கண்டறிய முடியவில்லை. இந்த எலக்ட்ரிக் கார்களில் நீங்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு, அதன் சக்கரங்களை புதிதாக மாற்ற வேண்டியது இருக்கும். ஆனால், இவற்றின் விலை தான் அனைவரையும் மலைக்க வைக்கிறது. 

    ஆனால், இந்த ஆடி ஆர்எஸ் இ-டிரான் ஜிடியின் முடுக்கம் இதனை எல்லாம் மறைத்து விடுகிறது. அது தான் எலக்ட்ரிக் கார்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளது. இந்த ஆடி ஆர்எஸ் இ-டிரான் ஜிடியில் இரண்டாவது கியரை மாற்றும்போது மட்டும் ஒரு சிறு அதிர்வை உணரக் கூடும். 

    இந்த ஒட்டுமொத்த பாராட்டும் ஆடியின் இ-குவாட்ரோ அமைப்புக்கே சொந்தம். இது மிக எளிதாக தேவையான முறுக்குவிசையை வழங்குகிறது, மேலும் அச்சுகளுக்கு இடையில் மிக எளிதாகவும் மாறுகிறது. ரைடு-பை-வயர் துரோட்டிலை தரையில் வைத்து அழுத்திய பிறகும் இதன் பைரெல்லி பி7 சிண்டுராடோஸ் சத்தத்தை கட்டுப்படுத்தி வைக்கிறது. 

    இந்த ஆடி நிறுவனத்தின் ஆர்எஸ் இ-டிரான் ஜிடி காரின் செயல்பாடு, எலக்ட்ரிக் கார்கள் மீது பெரும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....