Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉத்திர பிரதேசத்தில் இறுதி கட்ட வாக்கு பதிவு! பெரும் எதிர்ப்பார்ப்புடன் நாடே காத்திருப்பு !

    உத்திர பிரதேசத்தில் இறுதி கட்ட வாக்கு பதிவு! பெரும் எதிர்ப்பார்ப்புடன் நாடே காத்திருப்பு !

    ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. மணிப்பூர், உத்திர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்திரகண்ட் என ஐந்து மாநிலத்துக்கான பதிவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது. 

    இதில் பஞ்சாப், உத்திரகண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் மூன்றாம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. 

    நம் இந்திய நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் என்பதால் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 10 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று, இன்று ஏழாம் மற்றும் இறுதிகட்டத் தேர்தல் இன்று மாலை ஆறுமணியுடன் நிறைவடைகிறது. மொத்தம் 9 மாவட்டங்களில் 54 சட்ட மன்ற தொகுதியில் 613 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். up assembly election 2022

    மேலும் மார்ச் பத்தாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாட்டின் முக்கிய மாநிலங்கள் என்பதால் நாடே இதை பெரும் எதிர்ப்பார்ப்புடன் நோக்கி இருக்கிறது.

     நாமும் பார்ப்போம் யார் ஆட்சியைப் பிடிக்க போகிறார்கள் என்று!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....