Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம், வாய்ப்பு கொடுங்கள்: மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

    பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம், வாய்ப்பு கொடுங்கள்: மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

    டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, தங்கள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக-வின் கர்வத்தை உடைப்போம் என கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் தங்களை விரிவுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி.
    இந்த வெற்றி, கட்சிக்கு ஒரு அளவில்லாத உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி, குஜராத்தில் ஆம் ஆத்மியை பலமடையச் செய்யும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
    குஜராத் மாநிலத்தில் உள்ள பருச்சில், நேற்று நடைபெற்ற ஆதிவாதி சங்கல்ப் மாகசம்மேலனில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
    அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், குஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரையில், எங்களுடைய கட்சி கவலைப்படத் தேவையில்லை என பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள 6.5 கோடி மக்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல நினைக்கிறேன்.
    “பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம்; எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; உங்களுக்கு எங்கள் ஆட்சிப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறைத் தேர்தலில் எங்களை வெளியேற்றுங்கள்”. நான் மிகவும் ஊழலற்ற மற்றும் நேர்மையான நபர். பா.ஜ.க.வினரின் விசாரணை அமைப்புகள் வாயிலாக,  என்னிடம் நிறைய விசாரணைகளை நடத்தினர். ஆனால், விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதே என் நேர்மைக்கு சாட்சி என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    டெல்லி முதல்வரின் வேண்டுகோளை, குஜராத் மக்கள் ஏற்பார்களா? குஜராத் சட்டமன்றத் தேர்தலில்ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....