Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புமுடி உதிர்வு பிரச்சனையா? அதற்கான தீர்வுகள் இதோ!

    முடி உதிர்வு பிரச்சனையா? அதற்கான தீர்வுகள் இதோ!

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனையில் ஒன்று முடி உதிர்தல். சிலருக்கு வைட்டமின் குறைபாடுகள் பலருக்கு மன ரீதியான பிரச்சனைகளால் முடி உதிர்வு ஏற்படுகிறது.அதுவும் இன்றைய கால சூழலில் வேலை பளு அதிகரிப்பால் பலரின் வாழ்க்கை முறை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது. அதற்கான சில தீர்வுகளை இங்கு காணலாம்.

    hairfall remedies

    ஆலிவ் எண்ணையில் ஒரு டீஸ்பூன் தேனும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளும் சேர்த்து கலந்து தலையில் தடவி பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வு நிற்கும். இதை வாரத்திற்கு ஒருமுறையாவது செய்து வந்தால் நல்ல பயனை எதிர்ப் பார்க்கலாம். 

    தேங்காய்ப்பாலுடன் வெள்ளை மிளகாய் அரைத்து கலந்து தடவி வந்தால் பொடுகு தொல்லையும் அதனால் ஏற்படும் முடிவு உதிர்வும் கட்டுக்குள் வரும். மேலும் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இவ்வாறு செய்து வந்தால் முடி மிருதுவாகவும் பல பலவெனவும் தோன்றும்.

    வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை தலையில் தடவ வேண்டும். பிறகு வெந்தயத்தை நன்கு அரைத்து, முடியை ஏடு ஏடாக எடுத்து மண்டையில் நன்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வார இறுதி நாட்களில் செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து முடி நன்றாக வளரும். மேலும் இது உடலைக் குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும் உதவும்.

    முடி உதிர்வை தடுத்து, முடி வளர உதவும் பொருட்கள்:

    healthy food and fruitsஆமணக்கு, 

    தேங்காய்,

    மிளகு கீரை,                                   

    தேயிலை மர எண்ணெய்,

    வேலையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அவ்வப்போது உடல் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மன நிலையை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்து கொள்ளுதல் இது மாதிரியான பிரச்சனைகளில் இருந்து வெளிவர உதவி செய்யும் என மருத்துவர்கள் மற்றும் மன நிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் துரித உணவுகளை தவிர்த்து சத்தான உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்தல் அவசியம்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....